90 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் கொரோனா தொற்றுடன் தொடர்பில்லாதவை – மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

உலகம்

90 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் கொரோனா தொற்றுடன் தொடர்பில்லாதவை – மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

90 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் கொரோனா தொற்றுடன் தொடர்பில்லாதவை – மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

கொரோனா வைரஸ் தொற்று உலகையே உலுக்கி வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியும் பணிகள் பல்வேறு நாடுகளில் வேகமெடுத்துள்ளன. ரஷ்யா முதல் நாடாக கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை அறிவித்தாலும், அதன்மீதான பாதுகாப்பு அம்சங்கள் கேள்விகுறியாக உள்ளது. இந்தியாவில் 3 தடுப்பூசிகள் பரிசோதனை கட்டத்தில் முன்னணியில் உள்ளன.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளதாவது: வரும் 2021ம் ஆண்டின் இறுதிக்குள் நியாயமான விலையில் பயனுள்ள கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் உற்பத்தியில் இருக்கும். உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, கொரோனா தொற்றின் பரவல் குறையும் என்றும் 90 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் கொரோனா தொற்றுடன் தொடர்பில்லாதவை. ஊரடங்கு நடவடிக்கை, பிற நோய்களுக்கான மருத்துவ வசதி கிடைப்பதை தடை செய்துள்ளது. இதன் விளைவாக மலேரியா மற்றும் எச்.ஐ.வி., நோயால் இறப்பு அதிகரிக்கும்.

கொரோனா தொற்று தொடர்பான நடவடிக்கைக்கு, பில்கேட்ஸ் அறக்கட்டளை 350 மில்லியனுக்கும் அதிகமான நிதியை அளித்துள்ளது. ஆனால் அது போதாது. இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது. டிரில்லியன் கணக்கான செலவுகளை ஏற்படுத்தும் பொருளாதார சேதத்தை தடுக்க கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பல பில்லியன் டாலர்கள் செலவிடப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், புழக்கத்தில் உள்ள மற்ற கொரோனா வைரஸ்கள், புதிய கொரோனாவுக்கு எதிராக குறிப்பிட்ட அளவிலான பாதுகாப்பை வழங்கியதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. புதிய கொரோனா வைரஸ் வேறு சில தொற்றுநோய்களை போல அல்ல. உலக மக்கள்தொகையில் சுமார் 30 முதல் 60 சதவீதத்தினர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போட வேண்டும். அதிர்ஷ்டவசமாக இது அம்மை நோய் அல்ல என்பதால், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி எடுத்து கொள்ள தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்

Leave your comments here...