தூய்மையான நகரங்கள் பட்டியலில் 4வது முறையாக முதலிடம் பிடித்தது இந்தூர்.! தமிழகம் எத்தனையாவது இடம் தெரியுமா..?

இந்தியா

தூய்மையான நகரங்கள் பட்டியலில் 4வது முறையாக முதலிடம் பிடித்தது இந்தூர்.! தமிழகம் எத்தனையாவது இடம் தெரியுமா..?

தூய்மையான நகரங்கள் பட்டியலில் 4வது முறையாக முதலிடம் பிடித்தது இந்தூர்.! தமிழகம் எத்தனையாவது இடம் தெரியுமா..?

இந்தியாவை தூய்மைப்படுத்தும் நோக்கில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றது. தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான, தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்டார்.அதின்படி, ம.பி.,யின் இந்தூர் நகரம் நான்காவது முறையாக(2017,18,19,20), தேர்வானது. குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தையும், மஹாராஷ்டிராவின் மும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியிடுவது இது 5வது ஆண்டாகும். முதல்முறையாக 2016ல் கர்நாடகாவின் மைசூரு நகரம் முதலிடம் பிடித்தது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் புரி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:


4வது முறையாக இந்தூர் தூய்மையான நகரமாக தேர்வாகியுள்ளது. தூய்மைக்காக, அந்நகரமும், மக்களும், மிகச்சிறந்த அர்ப்பணிப்புடன் இருந்தனர். இதற்காக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மாநகராட்சி செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த பட்டியலில் தமிழகத்தின் கோவை -40, மதுரை -42, சென்னை-45வது இடத்தை பிடித்துள்ளது.இந்தூர் நகரும் இந்தூர் நகர மக்களும் தூய்மைக்கு முன்னுதாரணமாக விளங்குவதாக மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி பாராட்டினார்.

Leave your comments here...