ஜெய் ஹிந்த், பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்- என கோஷங்களுடன் “டைம்ஸ்” சதுக்கத்தில் ஏற்றப்பட்ட இந்திய தேசிய கொடி..!
இந்தியாவின், 74வது சுதந்திர தினம், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினரும், இதை சிறப்பாக கொண்டாடினர். இதை முன்னிட்டு, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள, புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், இந்திய தேசியக் கொடி நேற்று முன்தினம் ஏற்றப்பட்டது.
இந்திய துாதர் ரந்தீர் ஜெய்ஸ்வால், மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். டைம்ஸ் சதுக்கத்தில், இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது இதுவே முதன்முறை. இந்த விழாவில், இந்திய துாதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
#IndianFlag 🇮🇳 was hoisted in #TimesSquare, #NewYork on occasion of 74th #IndependenceDay Celebrations of India !
This is the first time ever that #India’s tri-color swirled with pride side by side of #American Flag at the world’s most symbolic place ! @IndiainNewYork#NYC #USA pic.twitter.com/pnJ0iYQh2x— Sonmoni Borah IAS (@sonmonib5) August 16, 2020
இதில், பாரம்பரிய உடை அணிந்தவாறு பங்கேற்ற இந்திய வம்சாவளியினர், ‘ஜெய் ஹிந்த், பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எப்.ஐ.ஏ., எனப்படும் அமெரிக்காவில் உள்ள இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு, இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
Leave your comments here...