இந்திய விவசாயிகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர் : தேசியக் கொடி ஏற்றி வைத்த பின் பிரதமர் மோடி உரை.!
இந்திய சுதந்திர தின விழா இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது.
டெல்லி செங்கோட்டைக்கு வருவதற்கு முன்பாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, தேசியக்கொடியை பிரதமர் மோடி ஏற்றினார். 7-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றும் பிரதமர் மோடி, வழக்கம் போல தலைப்பாகை அணிந்தபடி சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். வழக்கமாக சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தேசிய மாணவர் படையினர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற மிக மிக முக்கிய பிரமுகர்களும் சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர்.
தேசிய கொடியேற்றிய பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:
*இந்தியா தன்னிறைவு பெற வேண்டியது அவசியம்
*நான் உறுதியாக சொல்கிறேன் இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும்
*தன்னிறைவு பெறுவதற்காக சீர்திருத்தங்களை மேற்கொள்வோம்
*நமது தன்னம்பிக்கையே நாடு முன்னேறுவதற்கான வழி
*இளைஞர்கள் 20 வயதில் சொந்த காலில் நிற்க வேண்டும் என பெரியவர்கள்அறிவுறுத்துகிறார்கள்
* சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இந்தியா சொந்த காலில் நிற்க வேண்டும்
*பல மொழிகள், பல பிராந்தியங்கள் இருந்ததால் தான் நாடு சுதந்திரம் பெற முடிந்தது
*இந்தியாவில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன.
*பொருளாதார வளர்ச்சியுடன் மனிதத்தன்மையையும் மையமாக வைத்து செயல்படவேண்டும்.
*உலகை வழிநடத்த கூடிய இடத்தில் இந்தியா வர வேண்டும்
*உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு அதிகரிக்க வேண்டும்
*இந்திய விவசாயிகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர்.
Addressing the nation from the Red Fort. https://t.co/uHu73fOF17
— Narendra Modi (@narendramodi) August 15, 2020
*நமது விவசாயத்துறையின் கட்டமைப்பை தரம் உயர்த்த வேண்டியுள்ளது.
*நம்முன் பல்வேறு சவால்கள் உள்ளன. அவற்றை தாண்டி வெற்றி பெறும் சக்தி நம்மிடம்உள்ளது
*நம்மிடம் முன்பு வென்டிலேட்டர்கள் இல்லாமல் இருந்தன. தற்போது அதனை தயாரிக்கிறோம்
*சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது அனைத்திற்கும் அடிப்படையானது
*வங்கித்துறை முதல் விண்வெளித்துறை வரை, பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளோம்
*உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம் என்பதே நாம் இனி உச்சரிக்க வேண்டிய மந்திரம்
*இன்று உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கின்றன.
* ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என பல வழிகளில் இந்தியாமுன்னேறுகிறது
*கொரோனா காலத்திலும் இந்தியாவில் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது.
* நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தன்னிறைவு மூலம் எட்டப்படும்
*தன்னிறைவு இந்தியா என்ற லட்சியம் மெய்ப்படும்
* நம்முடைய கனிம வளங்களை கொண்டேநாமும் உற்பத்தியும் செய்ய வேண்டும்.
* அடுத்த 2 ஆண்டுகள் எப்படி முன்னேற வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும்
* தன்னிறைவு இந்தியா என்ற கனவு மிக விரைவில் நிறைவேறும்
* நமது கலாசாரம், பாரம்பரியத்திற்கு மிகப்பெரும் வரலாறு உள்ளது
* கொரோனா காலத்தில் 80 கோடி இந்தியர்களுக்கு இலவச உணவு பொருட்கள்வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Leave your comments here...