சென்னை விமான நிலையத்தில் ரூ.22.21 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.!
அபுதாபியிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தடைந்த, தஞ்சாவூரைச் சேர்ந்த சாமிநாதன் கண்ணன், தங்கவேல் சிவசங்கர், ஆகிய இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவர்களிடமிருந்து தங்கப் பசை அடங்கிய பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
அபுதாபியிலிருந்து மற்றொரு ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்த பயணியான கமாரூதீன் ஷாஜஹானிடமிருந்தும் தங்கப் பசை அடங்கிய பொட்டலம், சுங்கத்துறையினரின் சோதனையின்போது கைப்பற்றப்பட்டது.
Chennai Customs Int'l Airport : On 9.8.20 night 402 gms of gold valued at Rs 22.21 lakhs seized under Customs Act from 3 pax who arrived by flt IX-1642 & IX 1638 from Abu Dhabi resp. Gold paste was concealed in hand sleeves and inner wear of pax. pic.twitter.com/AK4CIO5w0e
— Chennai Customs (@ChennaiCustoms) August 10, 2020
மொத்தம் ரூ.22.21 லட்சம் மதிப்புள்ள 402 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...