திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல் திருட்டு : சிசிடிவியில் அடையாளம் காணப்பட்டதிருடர்கள் ..!

சமூக நலன்தமிழகம்

திருவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் மிக அருகிலேயே தாலுகா காவல் நிலையம், டிஎஸ்பி அலுவலகம், போலீசார் குடியிருப்பு ஆகிய பகுதிகளும் உள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு உத்தரவுப்படி பெரிய கோயில்களில் பக்தர்களுக்கு வழிபாடுகள் செய்ய அனுமதி இல்லாததால் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் தினமும் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று நடத்தும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் உண்டியல் ஒன்றை கொள்ளையர்கள் இருவர் கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவில் தூக்கிச் சென்றுள்ளனர். இது குறித்து நகர் காவல் துறையினர் விசாரணை செய்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் தற்போது மாரியம்மன் கோவில் உண்டியலை 2 கொள்ளையர்கள் திருட செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சிசிடிவியில் பதிவான திருடர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் உண்டியல் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Leave your comments here...