மண்டலகால பூஜை நிபந்தனைகளுடன் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி – கேரள தேவசம்போர்டு அமைச்சர் தகவல்.!
ஊரடங்கு அமலில் இருப்பதால் கேரளாவில் சபரிமலை, குருவாயூர் உட்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. அதே சமயம் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடைபெறும் பூஜை பக்தர்கள் இன்றி வழக்கம் போல் நடந்து வருகிறது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் மாதம் 16ம் தேதி முதல் மண்டல காலம் தொடங்க இருப்பதால் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் தேவஸ்தான தலைவர் வாசு, உறுப்பினர்கள், பத்தனம்திட்டை மாவட்ட கலெக்டர் நூரு, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போலீஸ் துறை உள்பட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:-பரிமலையில் மண்டல காலத்தை முன்னிட்டு கடும் நிபந்தனைகளுடன் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை நடத்திய சான்றிதழ் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும். சபரிமலை சீசனுக்கு முன்னதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
Leave your comments here...