விவசாயிகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்..!
வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் கடன் வசதியை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, பிஎம் கிசான் திட்டத்தின் ஆறாவது தவணையையும் துவக்கி வைத்தார். ஆறாவது தவணையாக, 8.5 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் 17 ஆயிரம் கோடி ரூபாயை இன்று பிரதமர் மோடி வழங்கினார். இந்நிகழ்ச்சி, நாடு முழுதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மக்களின் முன்னிலையில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக நடந்தது. இந்நிகழ்ச்சியில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
किसानों के कल्याण के लिए महत्वपूर्ण कदम। #AatmaNirbharKrishi https://t.co/EypUIvrQKq
— Narendra Modi (@narendramodi) August 9, 2020
இதன் பின்னர் விவசாயிகள் மத்தியில் கலந்துரையாடிய மோடி கூறியதாவது:அன்னை பூமியை காக்க குறைந்தளவிலான யூரியாவை பயன்படுத்த வேண்டும். 17 ஆயிரம் கோடி நிதி நேரடியாக 8.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தியை நடப்பு ஆண்டில் அதிகரிக்க முயலும் ம.பி., விவசாயிகளுக்கு பாராட்டுக்கள். சுயசார்பு திட்டத்தின் கீழ் விவாயிகளை விவசாயம் சார்ந்தவர்களை கொண்டு வர முயற்சி நடக்கிறது.விவசாய பொருட்களை பாதுகாக்க சேமிப்பு கிடங்கு அமைக்க கடன் வழங்கப்படும்.
ஒரே தேசம், ஒரே சந்தை என்பது சாத்தியப்பட்டுள்ளது.வேளாண் பொருட்களை உற்பத்தி செய்தவர்களே இனி நேரடியாக விற்பனையும் செய்ய முடியும். விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் கட்டமைப்பு நிதி மூலம் விவசாயிகள் தாங்கள் கிராமங்களில் நவீன சேமிப்பு கிடங்குகளை அமைக்க முடியும். மஹாராஷ்டிராவில் இருந்து பீஹார் வரை விவசாய ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.2018 டிசம்பரில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜ்னா (பி.எம்-கிசான்) திட்டத்தின்படி, ரூ. 9.9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 75,000 கோடி ரூபாயை வழங்கப்பட்டுள்ளது.
Leave your comments here...