சோதனை மேல் சோதனைக்கு உள்ளாகும் டிக்டாக் ; அமெரிக்காவிலும் டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு தடை-அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

உலகம்

சோதனை மேல் சோதனைக்கு உள்ளாகும் டிக்டாக் ; அமெரிக்காவிலும் டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு தடை-அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

சோதனை மேல் சோதனைக்கு உள்ளாகும் டிக்டாக் ; அமெரிக்காவிலும் டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு தடை-அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சீனாவின் டிக்டாக், வீசாட், ஹலோ உள்ளிட்ட சுமார் 106 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருந்தது. இந்தியாவின் இந்த செயலை அமெரிக்கா பாராட்டியது.

இந்நிலையில், டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், சீன நிறுவனங்களின் செயலிகளான டிக்டாக், வீசாட் ஆகியவற்றை தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இது அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

இது குறித்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவு: சீன நிறுவனங்கள் உருவாக்கிய செல்போன் செயலிகள் அமெரிக்காவில் பரந்து கிடக்கின்றன. இந்த செயலிகளால் தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் உள்ளது என தெரியவந்துள்ளது.இந்த நேரத்தில், ஒரு குறிப்பிட்ட செயலியின் செயல்பாட்டை பரிசீலிக்கவும், ஆய்வு செய்யவும் தேவை உள்ளது. சீனாவின் பைட்-டான்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிக்டாக் செயலி, அதைப் பயன்படுத்துவோரின் விவரங்களை தானாகவே அபகரித்துக்கொள்கிறது. அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் போன்வற்றை செயலி மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்துகொள்ள முடியும்.

இதன் மூலம் அமெரிக்க மக்களின், அதிகாரிகளின், ஒப்பந்ததாரர்களின் தனிப்பட்ட விவரங்களை அறியவும், அவர்களின் நடமாட்டதைத் கண்காணிக்கவும், மிரட்டவும் முடியும். இந்த அச்சுறுத்தலால் டிக்டாக் செயலிக்கு தடைவி தித்து உத்தரவிடுகிறேன். அதேபோல சீனாவின் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீசாட் சமூகவலைத்தளம், மற்றும் பணம் அணுப்பும் தளத்தையும் தடை செய்ய உத்தரவிட்டுள்ளேன். இந்த தடை உத்தரவு அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த தடை உத்தரவை அமல்படுத்த வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் அளிக்கிறேன், என கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...