கேரள முதல்வர் அலுவலகத்தில் ஸ்வப்னா சுரேஷ் நேரடி பழக்கம் : நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்..!

இந்தியா

கேரள முதல்வர் அலுவலகத்தில் ஸ்வப்னா சுரேஷ் நேரடி பழக்கம் : நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்..!

கேரள  முதல்வர்  அலுவலகத்தில்  ஸ்வப்னா சுரேஷ்  நேரடி  பழக்கம் : நீதிமன்றத்தில் என்ஐஏ  தகவல்..!

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 2 முறை தள்ளிவைக்கப்பட்ட இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, என்ஐஏ தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் விஜயகுமார், ‘ஸ்வப்னா சுரேஷ்க்கு கேரள முதல்வர் அலுவலகம், ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மற்றும் போலீசில் பெரும் செல்வாக்கு இருந்தது. முதல்வர் பினராய் விஜயனிடம் நேரடி பழக்கமும் இருந்தது.

இது சாதாரண பழக்கமாகவோ அசாதாரண பழக்கமாகவோ இருக்கலாம். எனவே, இவரை ஜாமீனில் விடுவித்தால், தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உண்டு. ஸ்வப்னா சுரேஷ்க்கு சிவசங்கர் வழிகாட்டி போல செயல்பட்டுள்ளார். அரசின் ஐடி துறை விண்வெளி பூங்காவில் சிவசங்கர்தான் அவருக்கு வேலை வாங்கி கொடுத்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கம் அடங்கிய பார்சலை சுங்க இலாகா பிடித்தபோது அதை விடுவிக்க சொப்னா கோரியும் சுங்க இலாகா மறுத்ததால் சிவசங்கரை சந்தித்து விடுவிக்க கூறுமாறு வலியுறுத்தினார். அவர் சுங்க இலாகாவை தொடர்பு கொண்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,’’ என்று வாதிட்டார்.

தொடர்ந்து வாதிட்ட ஸ்வப்னா சுரேஷ், தரப்பு வக்கீல்:- தங்கம் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னாவிடம் தெளிவான தகவல்கள் உள்ளன. இந்த சதியின் ஒவ்வொரு கட்டத்திலும் அவரது பங்களிப்பு இருக்கிறது. கேரள முதல்-மந்திரி அலுவலகத்தில் இவர் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றிருந்தார். அரசின் விண்வெளி பூங்கா திட்டத்திலும் இவருக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது.மாநில அரசின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப செயலாளர் சிவசங்கரை, அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சந்தித்து பிடிபட்ட தங்கத்தை வெளியில் கொண்டு வர உதவி கேட்டுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட அவர் மறுத்து விட்டார்.

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் ஸ்வப்னா பணியாற்றியபோது சராசரி ஊழியராக அவர் இல்லை. அவர் அந்த அலுவலகத்தின் ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வந்துள்ளார். அங்கிருந்து பணியில் இருந்து விலகியபிறகும் கூட, சுமார் 70 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த கடத்தலில் பங்குகொண்ட அனைவரும் சுமார் ரூ.3.50 லட்சம் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் தனது வாதத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் தொடக்கத்தில் இருந்தே சொப்னாவுடன் தனக்கு எந்த பழக்கமும் இல்லை என்று பினராய் விஜயன் கூறி வந்தார். இந்த நிலையில், பினராய் விஜயனிடம் சொப்னாவிற்கு நேரடி பழக்கம் இருந்தது என்று நீதிமன்றத்தில் என்ஐஏ கூறியுள்ளது அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...