கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்த வழக்கில் பிஷப்பை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.!
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பேராயராக இருக்கும் பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது.
குருவிளங்காடு காவல்நிலையத்தில் கன்னியாஸ்திரி அளித்த புகாரில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை சுமார் 13 தடவை பேராயர் பிராங்கோ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பேராயரை பிராங்கோவை கைது செய்யக்கோரி கேரளா திருவனந்தபுரத்தில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம் ஆரம்பித்தனர். அதை தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.பிரச்னையின் வீரியத்தை உணர்ந்த கேரளா மாநில காவல்துறை, பஞ்சாப் சென்று பேராயர் பிராங்கோவை கேரளா அழைத்து வந்தனர். அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீஸார் காவலில் எடுத்தனர்.இந்த வழக்கில், மூலக்கல்லுக்கு, கேரள உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியது.
தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன் மீது கன்னியாஸ்திரி பணம் பறிக்கும் நோக்குடன் பொய்யான புகார் கூறியுள்ளார். நான் நிரபராதி என் மீதான வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, போலீசாரின் விசாரணை அறிக்கையில் பிஷப்பிற்கு எதிரான ஆதாரம் வலுவாக இருப்பதால் விடுவிக்க மறுத்தார்.
Leave your comments here...