ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருவேன்,’ என்றார் ; இன்று அவர் அடிக்கல் நாட்டுகிறார் – பிரதமர் மோடி ..!

இந்தியா

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருவேன்,’ என்றார் ; இன்று அவர் அடிக்கல் நாட்டுகிறார் – பிரதமர் மோடி ..!

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருவேன்,’ என்றார் ; இன்று அவர் அடிக்கல் நாட்டுகிறார் – பிரதமர் மோடி ..!

ராமபிரான் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் நீண்டநாள் ஆசையாகும். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ். எஸ். போன்ற அமைப்புகள் நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. ஆனால் அங்கு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்ததால் இந்த முயற்சிகள் நிறைவேறாமல் இருந்தன.பல்லாண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப்போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.இந்நிலையில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காலை நடக்கிறது. இதையொட்டி, அயோத்தி மாவட்டம் முழுவதும், விழாக்கோலம் பூண்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, பூமி பூஜைக்கான சடங்குகள், அயோத்தியில் இரு நாட்களுக்கு முன்னரே துவங்கின.

மோடியின் கனவு:- பாஜக மூத்த தலைவர் அத்வானி 1990-ல் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு நடத்திய ரத யாத்திரையிலும், 1991-ல் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் ஒற்றுமை யாத்திரையின் போதும் பிரதமர் மோடி அயோத்திக்கு உடன் சென்றார். அங்கு நிருபர்களிடம் மோடியை காட்டி, ‛இவர் தான் குஜராத் பாஜக தலைவர்,’ என ஜோஷி அறிமுகம் செய்து வைத்தார்.

மோடியிடம் நிருபர்கள் ‛அடுத்த முறை அயோத்திக்கு எப்போது வருவீர்கள்?’ எனக்கேட்டனர். அதற்கு அவர், ‛ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருவேன்,’ என்றார். இன்று அவர் அடிக்கல் நாட்டுகிறார். தான் கூறியது போலவே மோடியின் கனவு நிறைவேறியுள்ளது.

Leave your comments here...