வருமான வரித்துறையில் ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஒய்வு.! மத்திய அரசு அதிரடி.!
- September 27, 2019
- jananesan
- : 869

வருமான வரித்துறையில் கருப்பு ஆடுகளாக செயல்படும் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
இதையடுத்து வருமான வரித்துறையில் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகளை களையெடுக்கும் பணியை மத்திய நிதியமைச்சகம் அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வருமான வரித்துறையின் முதன்மை ஆணையர், மற்றும் இளநிலை மற்றும் கூடுதல் ஆணையர் உள்ளிட்ட 15 அதிகாரிகள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து 15 அதிகாரிகளுக்கும் கட்டாய ஒய்வு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் ஏற்கெனவே 3 கட்டங்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 49 உயர் அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.