வீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு : அரசு அனுமதி அளிக்க தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

தமிழகம்

வீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு : அரசு அனுமதி அளிக்க தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

வீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு : அரசு அனுமதி அளிக்க தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

வீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு வைத்த நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாவும் வட இந்தியாவில் கணேச சதுர்த்தியாகவும் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படும். 10 நாள் விழாவாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு ஆவணி மாதம் 6ஆம் தேதி வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி வருகிறது.

விநாயகர் சிலைகளை பிரம்மாண்டமாக வைத்து பூஜைகள் செய்து படையல் போட்டு தினந்தோறும் பஜனைகள் பாடி வழிபடுவார்கள். விநாயகரை ஊர்வலமாக எடுத்துச்சென்று ஆறு, குளங்கள், கடலில் விசர்ஜனம் செய்வார்கள். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா பிரமாண்டமாக நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

வருகிற 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி வரவுள்ளது. அதற்கு முன்னதாக விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு, சிலைகளை தயாரித்து விற்பனைக்காக வைப்பது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆங்காங்கே இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிகம் உள்ளனர். மேலும் சிலைகளை ஒரு இடத்தில் மொத்தமாக வாங்கி வந்து சாலையோரம் வைத்து விற்பனை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி கிடைக்குமா? ஊர்வலம் நடைபெறுமா? என்பது சந்தேகமாக உள்ளது. இதனால் சிலை தயாரிப்பு தொழிலாளர்களும் விநாயகர் சிலைகளை தயாரித்து வைத்து அரசின் உத்தரவிற்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

இன்று சில நாட்களே விநாயகர் சதுத்தி உள்ள நிலையில் இந்து சகோதரர்கள் இந்த பண்டிகையை கொண்டாட முடியுமா என கவலையில் உள்ளனர். மேலும் வீதிகள் தோறும் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து இந்து சகோதரர்கள் வழிபாடு வழக்கம். உருவ வழிபாடு என்பது இஸ்லாம் மார்க்கம் இல்லையென்றால், பிறமத வழிபாடுகளை மதிக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இஸ்லாம் மார்க்கம் அறிவுறுத்துகிறது.

அந்த வகையில் இந்துசகோதர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வண்ணம் தமிழகத்தில் வீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். மேலும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க ஊர்வலமாக செல்வதை தவிர்க்கும் பொருட்டு, புதிய வழிமுறைகளை வகுத்து, தனிமனித இடைவெளியுடனும், முக கவசம் அணிந்தும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டுமென மீண்டுமொரு முறை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Leave your comments here...