அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கிய ஜெயின் சமூகத்தினர்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்லாமல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்தரப் பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அயோத்தியில், நாளை(ஆக.,5) நடக்க உள்ளது. இதையொட்டி, அயோத்தி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.
இதற்கு உதவும் வகையில் பல்வேறு அமைப்புகள் உதவி வருகிறது. இதன் ஒரு பங்களிப்பாக குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வசித்து வரும் ஜெயின் சமூக மக்கள் இணைந்து, அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிக்காக 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கியுள்ளனர்.
Jain Community donates 20kg Silver For the construction Of Ram mandir in Ayodhya. pic.twitter.com/f8PujIyUDi
— agamshastra (@truejainology) August 3, 2020
இதனை ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. பிரதிநிதிகளிடம் ஜெயின் சமூக சாமியார்கள் வழங்கியுள்ளனர்.
Leave your comments here...