நடிகர் வடிவேல் பாணியில் பாதையை காணோம் – கிராமமக்கள் தாசில்தாரிடம் மனு.!
- August 4, 2020
- jananesan
- : 863
- மதுரை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணார்பட்டி கிராமத்தில் தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ள பொது பாதை மற்றும் விளையாட்டு மைதானத்தை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா குலசேகரன் கோட்டை கிராமம் சாணார்பட்டி கிராமத்தில் தனிநபர் ஒருவர் நடைபாதை மற்றும் விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் தாலுகா அலுவலகத்தில் மூன்று முறை பட்டாவை பெயர் மாற்றம் செய்ய முயற்சி செய்து தற்போது வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார். இதை இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நடைபாதை மற்றும் விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க வாடிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் இப்பகுதி பொதுமக்கள் பாதியை காணோம் என்ற புகார் மனுவை கொடுத்தனர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மணிமேகலை என்பவர் கூறியதாவது:- நாங்கள் சாணார்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம் இங்கு உள்ள அனைவரும் நடந்து செல்லக்கூடிய பொது பாதையையும் எங்கள் குழந்தைகள் விளையாடக்கூடியவிளையாட்டு மைதானத்தையும் தனிநபர் ஒருவர் பட்டா வாங்கி வீடுகட்ட போர்வெல் போட்டு ஏற்பாடு செய்திருக்கிறார் இவர் ஒருமுறை இருமுறை அல்ல மூன்று முறை பட்டா மாற்ற ஏற்பாடு செய்து வருகிறார் இதற்கு இப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அதிகாரிகள் பெயர் மாற்றம் செய்து கொடுத்து உள்ளனர் நாங்களும் பலமுறை புகார் கொடுத்தோம் வருவாய்த்துறையினர் செவிசாய்க்கவில்லை ஆகையால் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நாங்கள் பாதையை காணோம் என்று புகார் கொடுத்துள்ளோம் இதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிராம பொது மக்களை ஒன்று திரட்டி மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போராட தயாராக உள்ளோம் என்று கூறினார்
Leave your comments here...