பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி படையில் எண்ணிக்கை பாதியாக குறைப்பு – திருப்பி அனுப்பப்படும் 200 பேர்..!

இந்தியா

பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி படையில் எண்ணிக்கை பாதியாக குறைப்பு – திருப்பி அனுப்பப்படும் 200 பேர்..!

பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி படையில் எண்ணிக்கை பாதியாக குறைப்பு – திருப்பி அனுப்பப்படும் 200 பேர்..!

பிரதமருக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்குவதால் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) வீரர்கள் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் நடவடிக்கை தொடங்கியது. முதல்கட்டமாக, 200 வீரர்கள் பழைய படைப்பிரிவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.

இதற்கு முன், முன்னாள் பிரதமர்கள், அவர்களின் குழந்தைகள் உள்ளிட்டோருக்கும், எஸ்.பி.ஜி.,வீரர்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர். இந்த சிறப்பு பாதுகாப்பு படை, 1985ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதில், துணை ராணுவத்தினர், சி.ஏ.பி.எப்., எனப்படும் மத்திய ஆயுதப்படை பிரிவினர், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மாநில சிறப்பு போலீஸ் படையினர் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவில் இருந்து சிறப்பாக பணிபுரிவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு, தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு, எஸ்.பி.ஜி.,யில் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.இதன்படி, சோனியா மற்றும் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு தரப்பட்டது.


இந்நிலையில், எஸ்.பி.ஜி., பாதுகாப்பு பணிக்கான சாசனத்தில், சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, பிரதமர் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியுள்ள குடும்பத்தினருக்கு மட்டும், கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்தால் போதுமானது. இதனால், கூடுதலாக உள்ளவர்களை, அவர்கள் ஏற்கனவே பணியில் இருந்த பிரிவுகளுக்கு, திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் தற்போது பிரதமர் மோடி ஒருவருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இப்படைப்பிரிவில் சுமார் 4,000 வீரர்கள் உள்ளனர்.

பிரதமர் ஒருவருக்கு மட்டுமே பாதுகாப்பு தருவதால், எஸ்பிஜி.யில் இவ்வளவு வீரர்கள் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்படையில் இருந்து வீரர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்படி, முதல் கட்டமாக 200 வீரர்கள் அவர்களின் பழைய பணிக்கே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்கள், உள்நாட்டு பாதுகாப்பில், தங்கள் கடமைகளை தொடர்வர். இந்த அமைப்பில் இருந்து, பல பணியாளர்களையும், அதிகாரிகளையும், ஒரே நேரத்தில் திருப்பி அனுப்புவது, இதுவே முதல் முறை; இந்த நடவடிக்கை தொடரும்.தற்போதைய, 200 பேர் பட்டியலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து வந்த, 86 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், எல்லை பாதுகாப்பு படையில், 45; மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில், 23; இந்தோ – -திபெத் எல்லை காவல்துறையை சேர்ந்த, 17 பேர் இடம் பெற்றுள்ளனர். ரயில்வே பாதுகாப்புப் படை, புலனாய்வு பணியகத்தை சேர்ந்தோரும் இந்த பட்டியலில் உள்ளனர். வரும் நாட்களில் மேலும் படை வீரர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் 50-60 சதவீதம் குறைவான வீரர்களே எஸ்பிஜி.யில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...