மேற்கு ஏர் கமாண்டின் தலைவராக “ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி” பொறுப்பு..!
இந்திய விமானப் படையின் மேற்கு ஏர் கமாண்டின் தலைமை அதிகாரியாக ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி AVSM VM 2020 ஆகஸ்ட் 1-ஆம்தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஏர் மார்ஷல் பி. சுரேஷ் PVSM AVSM VM ADC,- மிருந்து ஏர் மார்ஷல் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி இந்திய விமானப்படையின், போர் விமானியாக 1982 டிசம்பர் 29-ஆம் தேதி பணியில் சேர்க்கப்பட்டார். சுமார் 38 ஆண்டுகால சிறந்த பணியில், ஏர் ஆபிசர் , இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான விமானங்களை இயக்கியுள்ளதுடன், பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். 3800 மணி நேரத்துக்கும் மேல் , விமானத்தில் பறந்த அனுபவம் உள்ள அவர், மிக்-21, மிக்-23 எம் எப், மிக்-29, சு-30 எம்கேஐ போர் விமானங்கள் உள்ளிட்ட விமானங்களை இயக்கியுள்ளார்.
Air Marshal VR Chaudhari has taken over as the Air Officer Commanding in Chief of Western Air Command.#HarKaamDeshKeNaam pic.twitter.com/hyPqhHU2ek
— PRO Defence Palam (@DefencePROPalam) August 1, 2020
இந்திய விமானப் படையில் , அவரது சிறப்பான பணிக் காலத்தில், ஏர் ஆபிசர் பல முக்கியமான சேவைகளை ஆற்றியுள்ளார். முன்னணிப் போர் விமானப் பிரிவில் கமாண்டிங் அதிகாரியாக இருந்த அவர், முன்னணி விமானப்படைத் தளத்துக்கும் தலைமை வகித்துள்ளார். ஏர் வைஸ் மார்ஷல் அந்தஸ்தில், ஏர் ஸ்டாப் ஆபரேசன்ஸ் உதவித் தளபதி ( ஏர் டிபன்ஸ்) , வாயு பவன் தலைமையக ஏர் ஸ்டாப் உதவித் தளபதி ( பெர்சனல் அதிகாரிகள்) உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். ஏர் மார்ஷல் அந்தஸ்தில் , வாயு பவன் தலைமையகத்தின் துணைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார். தற்போதைய பொறுப்புக்கு முன்பாக, கிழக்கு ஏர் கமாண்டின், மூத்த ஏர் ஸ்டாப் அதிகாரியாக இருந்தார். ஏர் மார்ஷல் வெலிங்டன் பாதுகாப்பு சேவைப் பணியாளர் கல்லூரிவின் முன்னாள் மாணவராவார்.
அவரது மகத்தான சேவையைப் பாராட்டி, ஏர் மார்ஷலுக்கு 2004 ஜனவரியில் வாயு சேனா பதக்கமும், 2015 ஜனவரியில் அதி விஷிஸ்ட் சேவா பதக்கமும் வழங்கப்பட்டது.
Leave your comments here...