பேரிடர் நிர்வாகத்தில் சிறந்த பணியாற்றியவர்களுக்கான “சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார்” விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
- July 30, 2020
- jananesan
- : 903
- விருது
பேரிடர் நிர்வாகத்தில் சிறந்த பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் “சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார்” விருதுக்கு மத்திய அரசு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கு இணையதளம் வாயிலாக, 2020 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களைப் பெறும் பணி தொடங்கியுள்ளது.
தனிநபர்களும், நிறுவனங்களும் தமது விண்ணப்பங்களை, 2020 ஆகஸ்ட் 31-ந் தேதி வரை www.dmawards.ndma.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளான ஜனவரி 23-ந் தேதியன்று, ஆண்டுதோறும் இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
பேரிடர் நிர்வாகத்தில், சிறந்த பணியாற்றிய தனிநபர்களையும், நிறுவனங்களையும் அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசு, சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருதை நிறுவியது. இதனுடன் சான்றிதழும், நிறுவனங்களுக்கு ரூ.51 லட்சம் மற்றும் தனிநபருக்கு ரூ.5 லட்சமும் விருது பணமாக அளிக்கப்படும்.தனிநபர், தனக்காகவோ, மற்றவருக்காகவோ, ஒரு நிறுவனத்திற்காகவோ இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தடுப்பு, குறைப்பு, தயார்நிலை, மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு, ஆராய்ச்சி, புத்தாக்கம், ஆரம்பக்கட்ட எச்சரிக்கை ஆகிய அம்சங்களில், பேரிடர் நிர்வாகம் தொடர்பாக சிறந்த பணியாற்றிய நபர் அல்லது நிறுவனத்தை இந்த விருதுக்காக பரிந்துரை செய்யலாம்.
Leave your comments here...