கொரோனா பாதித்த பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு இல்லை – இந்த பகுதியை குமரி மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுமா..?

தமிழகம்

கொரோனா பாதித்த பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு இல்லை – இந்த பகுதியை குமரி மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுமா..?

கொரோனா பாதித்த பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு இல்லை – இந்த பகுதியை குமரி மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுமா..?

தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா வைரஸின் பாதிப்பு மட்டுமல்லாமல் பலி எண்ணிக்கையும் மிக அதிகமாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த மூன்று தினங்களாக பாதிப்பு ஏழாயிரத்தை நெருங்கியுள்ளது.

இதேபோல் குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதேபோல் பலி எண்ணிக்கையும் கூடுகிறது. குறிப்பாக காய்கறி சந்தைகள், கடைவீதிகள், நகைக்கடைகள், வங்கிகள், தொழிலாளர் மருத்துவமனை, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் போன்றவற்றில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் போன்றோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, இந்த அலுவலகங்கள், கடைகள் பூட்டப்பட்டன.

இந்நிலையில் குமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட ஊர் மணக்கரை 2 வார்டில் நேற்று 6 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரையிலும் கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் எதும் தெளிக்க படவில்லை. ஆனால் பக்கத்தில் உள்ள வார்டுகளில் எல்லாம் கிருமிநாசினி தெளிக்கபடுகிறது என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். எனவே மாவட்ட சுகாதார துறை நிர்வாகம் ஏன்..? இந்த பகுதியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்கள் என்று தெரியவில்லை..? இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.மேலும் இந்த வார்டில் பாஜக ஆதரவு பெற்றவர் கவுன்சிலராக உள்ளார்.

செய்தி : Vasu

Leave your comments here...