உர மோசடி வழக்கில் அசோக் கெலாட் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

இந்தியா

உர மோசடி வழக்கில் அசோக் கெலாட் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

உர மோசடி வழக்கில் அசோக் கெலாட் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

பண மோசடி வழக்கில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசென் கெலாட் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

உர மோசடி தொடர்பாக மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் பல்வேறு இடங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது.விதைகள் மற்றும் உரங்களின் வியாபாரத்தை நடத்தி வரும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசென் கெலாட்டும், இந்த மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்க இயக்குநரகத்தின் கழுகுப் பார்வையின் கீழ் உள்ளார். 2007-08’ஆம் ஆண்டில் முதன் முதலாக இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.

உர மோசடி தொடர்பான வழக்கில் ராஜஸ்தான் முதல்வரின் சகோதரர் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற இடங்களில் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தியது. இந்த வழக்கில், அக்ராசென் கெலாட்டிற்கு சுங்கத்துறை, ரூ.7 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.நாடு விவசாயிகளுக்காக உரத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கும் நிலையில், அரசின் மானியம் பெற்று கெலாட்டின் சகோதரர், மியூரியேட் ஆஃப் பொட்டாஷை உற்பத்தி செய்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

ஜோத்பூரில் உள்ள அக்ராசென் கெலாட் வளாகத்திலும் அமலாக்க இயக்குனரகம் தேடல்களை மேற்கொண்டு வருகிறது.இந்த விவகாரத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கும் அமலாக்க இயக்குநரகத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரம் மோசடி வழக்கில் சுங்கத்துறை புகார் பதிவு செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த பின்னர் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அக்ராசென் கெலாட் மீது அமலாக்கத்துறையினர் பண மோசடி மற்றும் சட்டவிரோத பணி பரிமாற்ற செய்ததாக வழக்குப்பதிவு இன்று (ஜூலை 29) ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.

Leave your comments here...