விலங்குகளை பாதுகாப்போம் என்கிற போர்வையில் சர்க்கஸ் தொழிலை அழித்து வருகிறது பீட்டா புளூ கிராஸ் – அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு…!
பீட்டா, புளூ கிராஸ் போன்ற கிறிஸ்துவ பின்னணி கொண்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு இந்து மக்கள் தலைவர் கண்டன அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- பீட்டா, புளூ கிராஸ் போன்ற கிறிஸ்துவ பின்னணி கொண்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விலங்குகளை பாதுகாப்போம் என்கிற போர்வையில் சர்க்கஸ் விலங்குகள் அனைத்தையும் கைப்பற்றிக்கொண்டு சர்க்கஸ் தொழிலை அழித்துவிட்டனர். இத்தொழிலை நம்பி இருந்த பல்லாயிரக்கணக்கான சர்க்கஸ் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தெருவில் நிற்கிறார்கள். விலங்குகளை வைத்து சர்க்கஸ் செய்வது ஒரு அற்புதமான கலையாகும்.
விலங்குகளைப் பழக்கி விலங்குகளின் அறிவு, விளையாட்டு திறமையை, சாதனைகளை வெளிக் கொண்டு, வந்து மக்களுக்கு காட்சிப் படுத்திக் கொண்டிருந்த சர்க்கஸ் கலை அழிவுக்கு, விலங்குகள் பாதுகாப்பு என்கிற போர்வையில் செயல்படும் பீட்டா போன்ற கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் மிக முக்கியமான காரணமாக உள்ளது.
சர்க்கஸில் விலங்குகளை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று சொல்லி சர்க்கஸ் விலங்குகளை கைப்பற்றிக் கொண்ட இவர்கள் அந்த விலங்குகளை சரியாக பராமரித்தார்களா! என்று சொன்னால் அதுவும் இல்லை! அந்த விலங்குகள் இவர்கள் சரிவர பராமரிக்காத காரணத்தினால் நோய்வாய்ப்பட்டு இறந்து போய்விட்டன.கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு, கோயில்களிலிருந்து யானையை கைப்பற்றிக் கொண்டு செல்வது, சர்க்கஸ் கலைஞர்களிடமிருந்து, விலங்குகளை கைப்பற்றி செல்வது ஆகிய காரியங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கோயில் யானைகளையும், சர்க்கஸ் விலங்குகளையும், சர்க்கஸ் கலைஞர்களையும், பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை இந்து மக்கள் கட்சி சட்டபூர்வமாக மேற்கொள்ளும் என அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
Leave your comments here...