எல்லையில் மீண்டும் ஆட்டுழியம் செய்யும் சீனா : இமாச்சல பிரதேச எல்லையில் 20 கி.மீ. தூரத்திற்கு புதிய சாலை கட்டமைத்த சீனா.!

இந்தியாஉலகம்

எல்லையில் மீண்டும் ஆட்டுழியம் செய்யும் சீனா : இமாச்சல பிரதேச எல்லையில் 20 கி.மீ. தூரத்திற்கு புதிய சாலை கட்டமைத்த சீனா.!

எல்லையில் மீண்டும் ஆட்டுழியம் செய்யும் சீனா : இமாச்சல பிரதேச எல்லையில் 20 கி.மீ. தூரத்திற்கு புதிய சாலை கட்டமைத்த சீனா.!

இந்தியாவை தொடர்ந்து சீண்டும் சீனா இமாச்சல பிரதேச எல்லையில் 20 கி.மீ. தூரத்திற்கு புதிய சாலையை வேகவேகமாக கட்டமைத்து வருகிறது.

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு\காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதலால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய-சீன ராணுவ கமாண்டர் அளவிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கோங் டெசோ பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீன படைகள், கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்க வேண்டும் எனவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் உள்ள கின்னோர் மாவட்டத்தில் உள்ள சரங்கிராம எல்லையில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலையை சீனா கட்டமைத்து வருகிறது. இந்திய – திபெத் பாதுகாப்புப் படையினருடன் எல்லையைப் பார்வையிட சென்ற சரங் கிராம மக்கள் 9 பேர், இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.அக்டோபர் மாதம் எல்லையில் சாலையை அமைக்கும் பணிகளை தொடங்கிய சீனா, தற்போது அதனை துரிதப்படுத்தி இருப்பதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஹிமாச்சல் எல்லையில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே எல்லைப் பகுதி பாதுகாப்புடன் இருப்பதாக கின்னோர் மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.ஹிமாச்சல பிரதேச மாநிலம் சுமார் 260 கி.மீ. தூரம் சீனாவுடனான எல்லையை பகிர்ந்துக் கொள்கிறது. இதில் 140 கிமீ தூரம் கின்னோர் மாவட்டத்தில் உள்ளது. லடாக் மோதலை அடுத்து 2 நாடுகளுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், எல்லையில் சீனா புதிய சாலையை கட்டமைத்து வருவது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...