கொரோனா நோயாளிகளைக் களங்கப்படுத்துதல் : குடியரசு துணைத்தலைவர் வேதனை..!

இந்தியா

கொரோனா நோயாளிகளைக் களங்கப்படுத்துதல் : குடியரசு துணைத்தலைவர் வேதனை..!

கொரோனா நோயாளிகளைக் களங்கப்படுத்துதல் : குடியரசு துணைத்தலைவர் வேதனை..!

கொரோனா நோயாளிகளைக் களங்கப்படுத்துதல் மற்றும் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கண்ணியமான முறையில் அளிக்கப்படும் பிரியாவிடையை மறுப்பது ஆகிய சம்பவங்கள் குறித்து குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.

இத்தகைய சம்பவங்கள் முற்றிலும் தேவையற்றவை என்று கூறியுள்ள அவர், இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் சமுதாயமும், உள்ளூர் மக்களும் தடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தமது பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ள:- தவறான எண்ணங்களை முறியடிப்பது தான் இப்போதைய அவசியத் தேவை. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில், இது தவறான செய்திகள் மற்றும் தகவல்களை விட அதிக நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும்’’ என்று கூறியுள்ளார். கோவிட்-19 நோயாளிகளை புரிதலுடனும், அனுதாபத்துடனும் ஒவ்வொருவரும் அணுக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், “யாருமே தற்போது பாதுகாப்பாக இல்லை என்பதையும், கண்ணுக்குத் தெரியாத கிருமி யாரை வேண்டுமானாலும் பாதிக்கக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்”’ என்றும் கூறியுள்ளார்.

கோவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவிடாமல் மக்கள் தடுக்கும் நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர், இது முற்றிலும் ஏற்கத்தக்கத்தல்ல என்றும், உயிரிழப்பால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் குடும்பத்தினருக்கு பக்கபலமாக நிற்கும் இந்தியாவின் தொன்மையான பாரம்பரியத்துக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.கல்வியறிவு இல்லாமை, மூடநம்பிக்கைகள், தவறான செய்திகள், வதந்திகள் ஆகிய பல்வேறு அம்சங்கள், மக்களிடையே தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தும் எரிபொருள் என்று தெரிவித்துள்ள திரு. நாயுடு, கொரோனா தொற்று மற்றும் அதன் பரவல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் மக்களுக்குக் கற்பித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்புப் பிரச்சாரங்களை சுகாதார அதிகாரிகளும், ஊடகங்களும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தப் பெருந்தொற்று காரணமாக உருவாகியுள்ள மோசமான நிலைமையை அனைவரும் ஒன்றுபட்டு சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், முதலாவது மற்றும் முக்கியமான குறிக்கோள், தொற்று இல்லாத நிலையை உருவாக்குவதுதான் என்று கூறியுள்ளார். “அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசங்களை அணிதல், தனி நபர் இடைவெளியைப் பராமரித்தல் ஆகிய விதிமுறைகளைப் பின்பற்றி, ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இன்று கார்கில் வெற்றி தினம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள குடியரசு துணைத்தலைவர், “கார்கில் வெற்றி தினத்தில் நாம் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தி வரும் நிலையில், இந்தியப் படையினரின் வீரம், நாட்டுப்பற்று, தாய்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உயிர்த்தியாகம் ஆகியவற்றுக்கு நாடு எப்போதும் நன்றியுடையதாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதில், தன்னலமற்ற சேவை புரிந்து வரும் ‘’ வெளியில் தெரியாத கோவிட் பணியாளர்கள்’’ ஆன விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறை, ஊடகங்கள், சுகாதாரப் பணியாளர்கள், விநியோக நபர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பு முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave your comments here...