கருப்பர் கூட்டத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுங்கள் : வெள்ளிமலை முருகன் கோவில் முன்பு நடைபெற்ற போராட்டம்.!

அரசியல்தமிழகம்

கருப்பர் கூட்டத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுங்கள் : வெள்ளிமலை முருகன் கோவில் முன்பு நடைபெற்ற போராட்டம்.!

கருப்பர் கூட்டத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுங்கள் : வெள்ளிமலை முருகன் கோவில் முன்பு நடைபெற்ற போராட்டம்.!

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டத்தை விரட்டி அடிக்கும் வண்ணம் வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருப்பர் கூட்டம் என்ற, ‘யு டியூப்’ சேனலில், ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக, தொடர்ந்து வீடியோக்கள் வெளியாகின. அத்துடன், கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்தும், வீடியோ வெளியிடப்பட்டது. இதையடுத்து, ‘யு டியூப் சேனலை முடக்க வேண்டும்; மதக் கலவரத்தை துாண்ட முயற்சிக்கும், சேனல் நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழகம் முழுவதும் பாஜக இந்து இயக்கங்கள் புகார்கள் அளித்தது.

இதனால், மத்திய குற்றப்பிரிவு போலீசார், கருப்பர் கூட்டம் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது, மத கலவரத்தை துாண்ட முயற்சி செய்தல், சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்தல் என, ஐந்து சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சேனலின் நிர்வாகி, செந்தில்வாசன், 49; புதுச்சேரியைச் சென்று சரணடைந்த மற்றொரு நிர்வாகி சுரேந்தர் நடராஜன், 38, ஆகியோரை கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கருப்பர் கூட்டம் சேனலில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் நீக்கியுள்ளனர்.

மேலும் கருப்பர் கூட்டத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பு கருப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்களை தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி முருகா பக்தர்கள் , பாஜக நிர்வாகிகள் இணைந்து போராட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் , மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சிவகுமார், குமரி ப.ரமேஷ், சிவபாலன், ஆளுர் வேணு , முருகா பக்தர்கள், உட்பட பலர் கலந்து கொண்டு கருப்பர் கூட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Leave your comments here...