கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு..!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், நிகழாண்டு செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் மாணவர்கள் மத்தியில் எழுந்தன.
இதையடுத்து கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் தொடங்கும் போது, கல்வி ஆண்டின் தொடக்கத்தில் கல்லூரி பருவத்தேர்வுகள் நடைபெறும் என்று அண்மையில் உயர்கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்நிலையில் முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான கல்லூரி பருவத்தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்ட செய்தி குறிப்பில்:- கலை , அறிவியல் இளநிலை படிப்பில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும், முதுநிலை படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பட்டய தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.எம்.சி.ஏ., படிக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...