கொரோனா – வெள்ள பாதிப்புகள் ; மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக இன்று கலந்துரையாடினார்.
தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, அசாம், பீஹார், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்திரகண்ட் மாநில முதல்வர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, அந்தந்த மாநிலங்களில, கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அசாம் மற்றும் பீகாரில் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.அசாமில் 26 மாவட்டங்களை சேர்ந்த 28 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 79 பேர் உயிரிழந்துள்ளனர். 1.18 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் பிரம்மபுத்ராவில் ஏற்பட்ட வெள்ள நீரில் மூழ்கின. 649 முகாம்களில் சுமார் 48 ஆயிரம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். காஸிரங்கா தேசிய பூங்காவில் ஏராளமான வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன.
தமிழகம், அசாம், பீகார், ஆந்திரா, தெலுங்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. பீகாரில் 25 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 208 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...