பாஜக, இந்து அமைப்புக்கள் தவிர எவருமே கருப்பர் கூட்டத்தின் ஆபாச செயலை கண்டிக்கவில்லை – ஹெச்.ராஜா ட்வீட்
கருப்பர் கூட்டம் என்ற பெயரில் ஒளிபரப்பாகும் யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கொச்சையாக பேசி வீடியோ வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் மற்றும் அதன் வெளியீட்டாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகை தேடி வந்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய வேளச்சேரி பகுதியை சேர்ந்த செந்தில்வாசன்(49) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரான சுரேந்திரன் நடராஜன் நேற்று முன்தினம் புதுச்சேரி மாநிலம் அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து புதுச்சேரி போலீசார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைதொடந்து மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை புதுச்சேரிக்கு விரைந்து சென்று குற்றவாளியை கைது செய்து நஎழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் கந்த சஷ்டி கவச விவகாரம் தொடர்பாக ஹெச்.ராஜா ட்வீட் செய்துள்ளார். அதில்:- 4 நாட்களுக்குள் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளது.
1.கயவர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்தது.
2.நான்கு நாள் கழித்து கோயமுத்தூர் சம்பவம்
பஜக, ஹிந்து அமைப்புக்கள் தவிர அந்த நான்கு நாட்களில் எவருமே கறுப்பர் கூட்டத்தின் ஆபாச செயலை கண்டிக்கவில்லை. ஆனால் கோவை சம்பவம் நடந்த உடனே அமைச்சர்கள் மற்ற கட்சித்தலைவர்கள் ஒவ்வொருவராக அதையும் கண்டிக்கிறோம் என்கிறார்கள். அப்படியானால் என்ன செய்தி அனுப்புகிறார்கள். சரியான எதிர்வினை ஆற்றினால்தான் இவர்களுக்கே கூட சொரணை வருமோ என்கிற சந்தேகம் வருகிறது.
#வெற்றிவேல்_வீரவேல் என கேள்வி எழுப்பியுள்ளார்.
4 நாட்களுக்குள் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளது.
1.கயவர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்தது.
2.நான்கு நாள் கழித்து கோயமுத்தூர் சம்பவம்
பஜக, ஹிந்து அமைப்புக்கள் தவிர அந்த நான்கு நாட்களில் எவருமே கறுப்பர் கூட்டத்தின் ஆபாச செயலை கண்டிக்கவில்லை. #வெற்றிவேல்_வீரவேல் pic.twitter.com/0bpMCvEUFX
— H Raja (@HRajaBJP) July 19, 2020
இதைப்போல மற்றோரு ட்விட்டில்: முருகப்பெருமானை இழிவு செய்தும் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த கறுப்பர் கூட்டம் எனும் கயவர் கூட்டத்தின் மீதி 9 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் எடுத்த நடவடிக்கை கண்துடைப்பாக கருதப்படும்.
முருகப்பெருமானை இழிவு செய்தும் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த கறுப்பர் கூட்டம் எனும் கயவர் கூட்டத்தின் மீதி 9 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் எடுத்த நடவடிக்கை கண்துடைப்பாக கருதப்படும்.#வெற்றிவேல்_வீரவேல்
— H Raja (@HRajaBJP) July 19, 2020
Leave your comments here...