ஜம்மு காஷ்மீரின் அம்ஷிபோரா பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்..!

இந்தியா

ஜம்மு காஷ்மீரின் அம்ஷிபோரா பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்..!

ஜம்மு காஷ்மீரின் அம்ஷிபோரா பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்..!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் அம்ஷிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலை அறிந்த பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


அப்போது பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, வேறு தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கி உள்ளார்களா? என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகளை கொன்றதாக போலீசார் தெரிவித்து இருந்தனர். அதில் ஜெய்ஷ்-இ-முகமது தளபதி ஒருவர் இருப்பதாக நம்பப்படுகிறது.ஜூன் மாதத்தில் பள்ளத்தாக்கில் நடந்த பல்வேறு மோதல்களில் பாதுகாப்புப் படையினர் 48 பயங்கரவாதிகளைக் கொன்றனர், அவர்களில் பெரும்பாலோர் தெற்கு காஷ்மீரின் நான்கு மாவட்டங்களில் உள்ளவர்கள் ஆவார்கள்

Leave your comments here...