லடாக்கில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு
இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும், சீன பொருட்களை (Boycott China) புறக்கணியுங்கள் என மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கோபம் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியா – சீனா இடையே இரு தரப்பிலும் படைகளை விலக்கி கொள்வதற்கான பேச்சுவார்த்தை ஒரு புறம் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இரு நாள் பயணமாக பிரதமர் மோடி திடீரென லடாக் சென்று வீரர்களை சந்தித்து பேசினார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஜவான்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். இதற்கிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கடந்த, ஜூலை5ம் தேதி, சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யீ உடன், தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்க் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சீன படைகள், திரும்பச் சென்றன.
#WATCH Ladakh: Defence Minister Rajnath Singh inspects a Pika machine gun at Stakna, Leh. pic.twitter.com/MvndyQcN82
— ANI (@ANI) July 17, 2020
இதன் பலனாக இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக வாபஸ் பெற்று வரும் சூழ்நிலையில், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். இன்று காலை லடாக் வந்து சேர்ந்தார். அவருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானேவும் வருகை தந்துள்ளனர்.
Ladakh: Troops of Indian Armed Forces carry out para dropping exercise at Stakna, Leh in presence of Defence Minister Rajnath Singh, Chief of Defence Staff General Bipin Rawat and Army Chief General MM Naravane. https://t.co/6k8PjTgKKq pic.twitter.com/qC5q03AYQ4
— ANI (@ANI) July 17, 2020
முதல் நாளான இன்று லே பகுதிக்கு மேலிருக்கும் ஸ்டக்னா, லுகுங் பகுதிகளை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்கிறார். ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட்ட அவர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் நாளை ஆய்வு செய்கிறார். ஸ்டக்னா பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்தும் சாகச நிகழ்ச்சிகள், பாதுகாப்பு ஒத்திகைகள் ஆகியவற்றையும் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
#WATCH Indian Army T-90 tanks and BMP infantry combat vehicles carry out exercise at Stakna, Leh in presence of Defence Minister Rajnath Singh, Chief of Defence Staff General Bipin Rawat and Army Chief General MM Naravane. pic.twitter.com/Psc3CJOWok
— ANI (@ANI) July 17, 2020
Leave your comments here...