கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு : கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனல்’ நிர்வாகி கைது..!
நாத்திக கருத்துகளை பரப்புவது போல சிலர், ‘கருப்பர் கூட்டம்’ என்ற, ‘யூ டியூப் சேனல்’ நடத்தி வருகின்றனர்.அதில், ஆபாச புராணம் என்ற பெயரில், கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து, இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், வீடியோ வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, இது போன்ற கருத்துகளை பரப்பிவருகின்றனர்.
இந்து கடவுளான முருகப் பெருமானை போற்றி, 19ம் நுாற்றாண்டில், கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டுள்ளது. முருகப்பெருமானிடம் மனம் உருக பாடப்பட்டும் பாடல்களை, அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி இருப்பது, தண்டனைக்குரிய குற்றம். அந்த சேனலை நடத்துபவர்களின் நோக்கம், ஹிந்துக்களையும், அவர்கள் வழிபடும் கடவுள்களையும் கொச்சைப் படுத்துவதாகவே உள்ளது. மத மோதல்களை ஏற்படுத்தி, சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயலும் மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்த யூ டியூப் சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். அதன் நிர்வாகிகளை, கைது செய்ய வேண்டும் என பாஜக இந்து இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் போலீசில் புகார் அளித்து வருகிறார்கள்.
இந்த புகாரின் அடிப்படையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகிகள், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கருப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட்ட நாத்திகன் என்கிற சுரேந்திரன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமை ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும் பல்வேறு தகவல்களை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலின் நிர்வாகிகளில் ஒருவரான செந்தில் வாசனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட செந்தில் வாசனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.சுரேந்தர் நடராஜன் மற்றும் அவரது கூட்டாளி களை, தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
Leave your comments here...