வேலைவாய்ப்புக்கு ஏற்ப இளைஞர்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் – உலக இளைஞர் திறன் தினத்தில் பிரதமர் மோடி அறிவுரை
- July 15, 2020
- jananesan
- : 1050
- Narendra Modi
இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும் உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-
Addressing a conclave on World Youth Skills Day. https://t.co/2KMIQg0kUy
— Narendra Modi (@narendramodi) July 15, 2020
இன்று உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்றுநோய் பரவி உள்ள இந்த நேரத்தில், வேலை கலாச்சாரத்துடன், வேலையின் தன்மையும் மாறிவிட்டது. எப்போதும் மாறிவரும் புதிய தொழில்நுட்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாறிவரும் காலங்களில் இளைஞர்கள் புதிய திறன்களைப் பெறுகின்றனர்.
திறன் என்பது நாம் நமக்கு நாமே கொடுக்கும் பரிசு, அது அனுபவத்துடன் வளர்கிறது. திறன் தனித்துவமானது, இது உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம். வேலை வாய்ப்புக்கு ஏற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். ந்த விதத்திலும் விட்டுவிடக்கூடாது. வேலை மட்டுமின்றி செல்வாக்கு ஊக்கத்தையும் திறன் வழங்குகிறது.பணம் சம்பாதிக்க மட்டும் திறமையை வளர்த்து கொள்ளக்கூடாது. ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த வகையிலும் விட்டுவிடக்கூடாது. திறமை என்பது வெறும் பணம் சம்பாதிப்பதற்கான வழி மட்டுமல்ல. அது உற்சாகம் அளிக்கக்கூடியதும் கூட.இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...