இ-சிகரெட் போன்று புகையிலை பொருட்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை

சமூக நலன்

இ-சிகரெட் போன்று புகையிலை பொருட்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை

இ-சிகரெட் போன்று புகையிலை பொருட்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை

பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கும். பேனா போன்று நீளமாக இருக்கும். அதன் உள்ளே நிகோடின் திரவம் நிரப்பப்பட்ட சிறிய குடுவை இருக்கும். அதைச் சூடுபடுத்தும் கருவியும் பேட்டரியும் இருக்கும். பேட்டரியால் இயங்கும் சிகரெட்டை ஒருவர் வாயில் வைத்து உள்ளிழுக்கும்போது அதிலிருக்கும் சென்சார், சிக்னல் அனுப்பி அந்தக் கருவியை இயக்கும். கருவி இயங்கத்தொடங்கியதும், குடுவையில் இருக்கும் நிகோடின் திரவம் ஆவியாகி, புகைப்பவரின் நுரையீரலுக்குள் செல்லும். அதை வாயில் வைத்து உறிஞ்சும்போது வெளியில் புகை வராது, தீக்கங்கும் இருக்காது. பலமுறை பயன்பாட்டுக்குப் பிறகு நிகோடின் திரவம் காலியானதும் மீண்டும் அதை நிரப்பிக்கொள்ள முடியும். பேனா, யுஎஸ்பி டிரைவ் எனப் பல்வேறு கண்ணைக் கவரும் டிசைன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

புகையிலைப் பயன்பாடு இல்லை, குடலைப் புரட்டும் நாற்றமில்லை, உடல்நலப் பாதிப்புகளும் அதிகமில்லை என்பன போன்ற கவர்ச்சியான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. 500-க்கும் மேற்பட்ட விதவிதமான ஃபிளேவர்களில், ரூ.300 – ரூ.4,000 வரை இந்த இ-சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இ-சிகரெட் மட்டும் மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இ-சிகரெட் போன்ற சிகரெட் பிடிப்பவர்கள் மட்டுமில்லாது, அந்த புகையை சுவசிப்பவர்க்கும் பாதிக்கப்படுகின்றன.மேலும் புகையிலைப் பயன்பாட்டால் ஓராண்டில் 9 லட்சம் பேரை இழந்து கொண்டிருக்கும் வேலையில், இ-சிகரெட் மட்டும் மத்திய அரசு தடைவிதித்து இருப்பது வரவேற்கும், அதே வேளையில் மற்ற சாதாரண சிககெட், பான்மசாலா, புகையிலை போன்ற பொருட்களை நாடு முழுவதும் தடை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.

தற்போது புகை பழக்த்தாலும் மற்ற போதை பொருட்களாலும் இளைய சமுதாயம் சிக்கி தவித்து வருகிறது. இதிலிருந்து இளைஞர்களை மீட்டுக்க வேண்டுமென்றால் ஒட்டுமொத்த புகையிலை பொருட்களையும் நாடு முழுவதும் தடை செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும். இதன் மூலம் சுற்றுப்புற சூழல் பாதுகாக்கபடுவதுடன், ஆண்டு தோறும் புகையிலை பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பையும் தடுக்க முடியும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்..

…நமது நிருபர்
பாண்டியன்

Comments are closed.