விசாகப்பட்டினம் விஷ வாயு கசிவால் 12 பேர் உயிரிழந்த விவகாரம் : சிஇஓ உட்பட 12பேர் கைது…!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் இருந்து, கடந்த மே,7ம் தேதி அதிகாலை, 2:30 மணியளவில் விஷ வாயு கசிந்தது. இந்தவிஷ வாயு காற்றில் பரவியதால், தொழிற்சாலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மயங்கி விழுந்தனர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகினர் .
இந்த விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாகமுன்வந்து வழக்கு பதிவு செய்து, ரூ.50 கோடியை வைப்புத் தொகையாக செலுத்த எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, விபத்துக்கான காரணம் குறித்து ஆராய ஆந்திர அரசு அமைத்துள்ள குழு தனது 4 ஆயிரம் பக்க ஆய்வறிக்கையை சமர்பித்தது.
அந்த அறிக்கையின்படி ஆலையின் இரு தொழில்நுட்ப இயக்குனர்கள், தலைமை நிர்வாகி உள்பட 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.எம்.டி, டெக்னிக்கல் டைரக்டர் ஆகியோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்
Leave your comments here...