கான்பூர் என்கவுன்டர் ; ரவுடி விகாஷ் துபேயை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2.5 லட்சம் பரிசுத்தொகை

இந்தியா

கான்பூர் என்கவுன்டர் ; ரவுடி விகாஷ் துபேயை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2.5 லட்சம் பரிசுத்தொகை

கான்பூர் என்கவுன்டர் ; ரவுடி விகாஷ் துபேயை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2.5 லட்சம் பரிசுத்தொகை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அருகே, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபேயை பிடிக்கச் சென்ற போலீசார் மீது, ரவுடி கும்பல், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில், ஒரு டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உட்பட, எட்டு போலீசார் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஏழு போலீசார் படுகாயம் அடைந்தனர்.

உ.பி.,யில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரவுடி விகாஷ் துபேயை பிடிக்க, போலீசார் தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளனர். துபேயின் கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, என்கவுன்டர் நடந்த இடத்துக்கு அருகில் உள்ள சவுபேபூர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சில போலீசாருக்கு, ரவுடி கும்பலுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 1 லட்சம் ரூபாய் துபேயை பிடிப்பதற்காக போலீசார் வரும் தகவலை, சவுபேபூர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சிலர், முன் கூட்டியே ரவுடி கும்பலுக்கு கசியவிட்டதும் தெரிய வந்தது.இதன் அடிப்படையில், அந்த ஸ்டேஷனின் பொறுப்பு அதிகாரி, சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


இந்நிலையில் ஒரு எஸ்.ஐ., உட்பட, மேலும் மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்களுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள ரவுடி விகாஷ் துபேயை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படுவதாக, சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பரிசு தொகை, 2.50 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...