ஏழைகள் நல வாழ்வுத் திட்டத்தின் கீழ் வீட்டுக் குழாய் இணைப்புகளை வழங்குவதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் – மத்திய அரசு
உலகமும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வரும் சூழலில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த மிகப்பெரிய சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றுகிறது, குறிப்பாக கிராமப்புறங்களுக்கு வாழ்வாதார ஏற்பாடுகளை செய்யவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்தச் சூழலில், ஏழைகள் நலவாழ்வுத் திட்ட (GKRA) 20.06.2020 அன்று, வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்காக விரிவான பொதுப்பணிகளைத் தொடங்கவும், திரும்பி வந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் இதேபோல் பாதிக்கப்பட்ட கிராமப்புற குடிமக்களுக்கு உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்கவும் தொடங்கப்பட்டது. 125 நாட்கள் நீடிக்கும் இந்த பிரச்சாரத்தில், பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் பரவியுள்ள 27 முக்கிய மாவட்டங்கள் உட்பட 116 மாவட்டங்களில் தீவிரமான கவனம் செலுத்தும் செயல்பாடு நடைபெறும்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜல் ஜீவன் இயக்கம் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் வீட்டுக் குழாய் இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் குடிநீர் வழங்கல் தொடர்பான பணிகளில் தகுதியானவர்கள், திறமையானவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை ஈடுபடுத்த ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இந்த மாவட்டங்களின் கிராமங்களில் பணிகளைத் தொடங்க மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதால், வீடுகளைப் பொறுத்தவரை போதுமான அளவு தண்ணீர் கிடைக்க உறுதி செய்ய உதவுவது மட்டுமல்லாமல், புலம் பெயர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் இது உதவும்.
‘எளிதில் எட்டும் லட்சியப்’ பணிகளை எடுத்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதாவது தற்போதுள்ள குழாய் நீர் வழங்கல் திட்டங்களை விரிவாக்குவதன் மூலம் அல்லது மறுசீரமைப்பதன் மூலம் இந்தக் கிராமங்கள் ‘ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர்’, என்ற கொள்கையின் படி 100 சதவீதம் செயல்பாட்டு வீட்டுக் குழாய் இணைப்பு (FHTC) கிராமங்களாக மாறும். தற்போதுள்ள குழாய் நீர் விநியோக முறைகளைச் சீரமைப்பு செய்வதன் மூலம் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான கிராமங்களில் மீதமுள்ள வீடுகளுக்கும் வீட்டு இணைப்புகளை வழங்குவதற்கான பெரும் சாத்தியங்கள் உள்ளன.
இந்த பிரச்சாரம் காலவரையறைக்கு உட்பட்டு குறிப்பிட்ட முடிவுகளைத் தருவதற்கு, வெற்றிகரமாக செயல்படுத்தக் கூடிய இலக்குடன் கூடிய திட்டமிடல் தேவை. ஒவ்வொரு GKRA கிராமத்திலும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள FHTC களின் எண்ணிக்கை, அதனுடன் தொடர்புடைய நிதிப் பயன்பாட்டுத் திட்டம், கிராமங்கள், தொகுதிகள் மற்றும் மாவட்டங்களுக்கான 100 சதவீத FHTC கவரேஜ் திட்டத்தின் விளைவாக தகுதியான, திறமையான / திறமையற்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் கிராமவாசிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதே முக்கிய நோக்கமாக / செயல்திறன் குறிகாட்டிகளாகக் (KPI) கொண்டுள்ளது மேலும் மாநிலங்கள் இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளன. குழாய் அமைப்புப் பணி, கட்டுமான வேலை, எலக்ட்ரீசியன்கள், குழாய் பொருத்துவோர் போன்ற பணிகளுக்கு புலம் பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட உள்ளூர் மக்களுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்கான பிரச்சாரங்கள் தொடங்கப்படுகின்றன, இதனால் நீர் வழங்கல் தொடர்பான பணிகளுக்கு திறமையான மனித சக்தி கிடைக்கும். இது தவிர, கிராமச் செயல்திட்டங்களை (VAP) நிறைவேற்றவும், கிராமப் பஞ்சாயத்து அதிகாரிகள்/ கிராம நீர் மற்றும் துப்புரவுக் குழுக்கள்/ பானி சமிதி, தகவல் கல்வித் தொடர்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் உறுப்பினர்களின் திறன் மேம்பாடு ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தத் திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்ட ‘முக்கிய மாவட்டங்களுக்கு’ சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
அடையாளம் காணப்பட்ட இந்த மாநிலங்களுடன் JJM இயக்கத்தின் கீழ் பணிகளுக்கான முதல் மறுஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன், முக்கிய மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி இத்திட்டம் செயல்படுத்த இரண்டு வாரங்கள் மாவட்ட மற்றும் கிராம வாரியாக பாதுகாப்புத் திட்டத்தைத் செயல்படுத்த தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த லட்சிய பிரச்சாரம், ஜல் ஜீவன் இயக்கத்தைச் செயல்படுத்தி, வீட்டுக் குழாய் இணைப்புகளை வழங்குவதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புற வேலைவாய்ப்பையும் உருவாக்கி கிராமப்புற பொருளாதாரத்தை
Leave your comments here...