சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி திடீர் ஆய்வு.!

இந்தியா

சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி திடீர் ஆய்வு.!

சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி திடீர் ஆய்வு.!

சீனாவுடன் எல்லை மோதல் நடந்த லடாக் பகுதியில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு செய்து வருகிறார்.

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

இதையடுத்து, நாடு முழுவதும், சீன பொருட்களை (Boycott China) புறக்கணியுங்கள் என அறைகூவல் விடுக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கோபம் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது.சீன உபகரணங்களை பயன்படுத்தப்போவதில்லை என இந்திய ரயில்வே துறையும், பிஎஸ்என்எல் நிறுவனமும் முடிவு செய்துள்ளன. மேலும், உ.பி மாநிலத்தில் ரயில்வே பணிகளுக்காக சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா அரசு, சீன நிறுவனங்களுடன் ரூ.5 ஆயிரம் கோடியில் செய்திருந்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளது. பீகாரில் பாலம் கட்ட இரு சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.2,900 கோடி ஒப்பந்தத்தை அம்மாநில அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

மேலும் இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதைபோல் சாலை கட்டுமான பணிகளில் கூட்டு திட்டங்களில், சீனா நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என கூறியுள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி. சீனாவுடன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து அதிநவீன போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள், ஆயுதங்களை ரூ.38,900 கோடிக்கு வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இருநாட்டு எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. சீனாவை வர்த்தக ரீதியாகவும் பதிலடி தர இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்காக மத்திய அரசு உறுதியான முடிவை எடுத்துள்ளது.


இந்நிலையில் இதனை தொடர்ந்து தற்போது லடாக் பகுதியில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு செய்து வருவது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும் பிரதமர் மோடியுடன் முப்படைத்தளபதி பிபின் ராவத்தும் லடாக் சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...