ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்..!

இந்தியாஉலகம்

ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்..!

ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்..!

ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது.

இந்தியா – சீனா எல்லையில் பதற்றம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில் இந்திய அரசு இந்திய விமானப் படைக்காக 21 மிக் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், ரூ.18,148 கோடி மதிப்பிலான 33 போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.


ரஷ்யாவிடம் இருந்து 18,148 கோடி ரூபாய் மதிப்பில் 33 போர் விமானங்களை வாங்கப்பட உள்ளது. இவற்றில் 12 சுகோய் 30 எம்கேஜே ரக விமானங்கள் மற்றும் 21 மிக்-29 எஸ் ரக போர் விமானங்கள் அடங்கும். பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் அந்த போர் விமானங்கள், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில், விமானப்படை புதிய திட்டத்தை முன்வைத்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.மேலும், விமானப்படை மற்றும் கடற்படைக்கு 248 அஸ்திரா ஏவுகணைகளை வாங்கவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.வானிலிருந்து ஏவப்பட்டு வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கும் வல்லமை கொண்டது அஸ்திரா ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக இன்று பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய பிரதமருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ரஷ்யாவின் பிரதமராக புதின் 2036 ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் கிடைத்திருக்கும் சூழ்நிலையில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அத்துடன் இந்தப் போர் விமானங்கள் குறித்த முக்கிய விஷயங்கள் குறித்து அவருடன் பேசியுள்ளார்.

Leave your comments here...