நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது – கொரோனாவால் இந்தியாவில் உயிரிழப்போர் விகிதம் குறைவு – பிரதமர் மோடி உரை
- June 30, 2020
- jananesan
- : 1030
- Narendra Modi

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.
அவர் நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் :- கொரோனாவை எதிர்தது போராடும் சூழலில் மழை காலம் துவங்கிவிட்டது. மழை காலம் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இந்தகாலத்தில் காய்ச்சல் , சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை. இப்போது செய்யக்கூடிய சிறிய தவறுகள் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம். சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட முழு முடக்கத்தால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது. பிற நாடுகளுடம் ஒப்பிடும் போது நமது நாடு கொரோனாவை சிறப்பாக எதிர் கொண்டுள்ளது.
Addressing the nation. https://t.co/7urZ7A7nPu
— Narendra Modi (@narendramodi) June 30, 2020
பிரதமர் முதல் சாமனியர் வரை நமது நாட்டில் ஒரே விதிமுறைதான். கிராமப் புறங்களில், வளர்ச்சியை ஏற்படுத்த ரூ,50,000 கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளது. 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்கும் திட்டம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டும். அரிசி கோதுமையுடன் ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும். இலவச பொருட்களுக்காக அரசுக்கு கூடுதலாக 90 ஆயிரம் கோடி செலவாகும். * பண்டிகைகள் அடுத்து வருவதால், கரீப் கல்யாண் திட்டம் நீட்டிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
Leave your comments here...