லடாக் எல்லையில் சீன அத்துமீறலுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது – மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் வானொாலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். அதன்படி 66-வது மன் கி பாத் நிகழ்ச்சியான இன்று கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்:- கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது.இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது.பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.இந்தியா எப்போதும் தனக்கான பிரச்சினைகளை வாய்ப்புகளாக மாற்றியுள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்களை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது.நமது எல்லை மற்றும் இறையாண்மையை காப்பதில் இந்தியா கொண்டுள்ள உறுதித்தன்மையை உலகம் பார்த்துள்ளது. லடாக்கில், நமது பகுதியில் அத்துமீறலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. லடாக்கில் வீரமரணம் அடைந்த நமது தைரியமிக்க வீரர்களுக்கு தேசம் தலை வணங்குகிறது. அவர்களின் தியாகம் என்றும் நினைவில் கொள்ளப்படும்.உயிரிழந்த ராணுவ வீரர்கள் – ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்காக துக்கத்தில் இருக்கிறது. தங்கள் குடும்பத்தில் ஒருவர் உயிர் இழந்தாலும் அடுத்தவரை இந்த நாட்டுக்காக அனுப்ப பலர் முன் வந்துள்ளனர். சுயமரியாதை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.லடாக் எல்லையில் சீன அத்துமீறலுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பதும், நட்பை வளர்ப்பது எப்படி என்றும் இந்தியாவுக்கு தெரியும்.
Sharing this month’s #MannKiBaat. https://t.co/kRYCabENd5
— Narendra Modi (@narendramodi) June 28, 2020
தற்போதைய சூழ்நிலையில் மக்கள் அனைவரது ஒத்துழைப்பும் மிக அவசியம். தற்சார்பு பொருளாதார நடவடிக்கைக்கு நாடு முழுவதும் மக்கள் பேராதரவு தருகின்றனர். சுய சார்பை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது.கொரோனா வைரஸ் நாம் வாழக்கூடிய சூழ்நிலையை நிச்சயமாக மாற்றியிருக்கிறது. முக கவசம் அணிய வில்லை என்றாலோ அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றாலோ உங்கள் உயிரை மட்டுமின்றி மற்றவர்களின் உயிரையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறீர்கள் என்று அர்த்தம். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
கொரோனா பரவல் எப்போது முடியும் என்பது தான் பலரும் பேசும் விஷயமாக உள்ளது. 2020ம் ஆண்டு எப்போது நிறைவு பெறும் என மக்கள் நினைக்கின்றனர். இந்த ஆண்டு பல சவால்கள் நிறைந்த ஆண்டாக உள்ளதாக நினைக்கின்றனர்.பல சவால்கள் இருந்தாலும், அதிலிருந்து நாம் மீண்டு வந்துள்ளதற்கான வரலாறு நம்மிடம் உள்ளது. சவால்களுக்கு பிறகு நாம் வலிமையானவர்களாக மாறுகிறோம். ஆண்டின் முதல் 6 மாதம் கடினமாக இருந்ததால், எஞ்சிய 6 மாதமும் அப்படியே இருக்கும் எனக்கூற முடியாது.
லடாக்கில் அத்துமீறலுக்கு பின் உள்நாட்டு பொருளையே வாங்க வேண்டும் என நாடு முழுவதும் சிலர் உறுதியேற்றுள்ளனர் பாதுகாப்பு துறையிலும் இந்தியா சுயசார்பு அடைய வேண்டும் என்பது தமிழகத்தை சேர்ந்த மோகன் ராமமூர்த்தி என்பவரது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...