கொரோனா வைரஸ் பரவல் : நடிகர் அஜித்தின் ‘தக்‌ஷா’ குழுவுக்கு கர்நாடகா துணை முதல்வர் பாராட்டு..!

இந்தியாசமூக நலன்

கொரோனா வைரஸ் பரவல் : நடிகர் அஜித்தின் ‘தக்‌ஷா’ குழுவுக்கு கர்நாடகா துணை முதல்வர் பாராட்டு..!

கொரோனா வைரஸ் பரவல் : நடிகர் அஜித்தின் ‘தக்‌ஷா’ குழுவுக்கு கர்நாடகா துணை முதல்வர் பாராட்டு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தக்ஷா குழு உருவாக்கிய ஆளில்லா விமானம் மூலம் சிவப்பு மணடலங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தொடர்புடைய டாக்டர் கார்த்திக் நாராயணன் பேட்டி ஒன்றில் அஜித்தை பாராட்டியிருந்தார். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு அமைதியாக உதவி செய்து வரும் அஜித்துக்கு நன்றி என்று கார்த்திக் நாராயணன் தெரிவித்தார்.

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இருக்கும் வான்வெளி ஆய்வு மையான தக்ஷா குழுவின் ஆலோசகராக அஜித் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆளில்லா விமானங்களை உருவாக்க அஜித் எம்.ஐ.டி. மாணவர்களுக்கு வழிகாட்டினார். அஜித் தலைமையிலான தக்‌ஷா குழுவினர் உருவாக்கிய இந்த ட்ரோன்கள், 30 நிமிடத்தில் சுமார் 16 லிட்டர் கிருமி நாசினியை தெளித்து விடும் திறன் கொண்டவை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கர்நாடகாவிலும் தக்ஷா குழுவை வைத்து ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினியை தெளிக்கும் பணியை துவங்கியிருக்கிறார்கள். கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆளில்லா விமானங்களின் புகைப்படங்களை வெளியிட்டு கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண் அஜித்தை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.


இதனை பற்றி அஸ்வத் நாராயண் கூறியிருப்பதாவது:-ஆளில்லா விமானங்கள் மூலம் கிருமி நாசினியை தெளிக்க வழி கண்டுபிடித்த நடிகர் அஜித் குமார் ஆலோசகராக இருக்கும் தக்ஷா குழுவுக்கு பாராட்டுக்கள். கோவிட் 19 போராட்டத்தில் தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். தற்போது இதனை அஜீத் ரசிகர்கள் டிவிட்டரில் டிரன்டிங் செய்து வருகிறார்கள்

Leave your comments here...