கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டம் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்..!
- June 27, 2020
- jananesan
- : 1271
- #RamNathKovind
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 1,482 நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள், 58 பன்முக மாநிலக் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கீழ் கொண்டுவர கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.பஞ்சாப் கூட்டுறவு வங்கி, மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் முதலீட்டாளர்கள் பல்வேறு துன்பங்களைச் சந்தித்தார்கள். அதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.கூட்டுறவு வங்கியில் உள்ள 8.6 கோடி முதலீட்டாளர்களின் ரூ.4.84 லட்சம் கோடி பணத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவே விளக்கம் அளிக்கப்பட்டது
இந்த அவசர சட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து இன்று அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளார்.இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
Leave your comments here...