ஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் ரத்து.!

இந்தியா

ஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் ரத்து.!

ஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் ரத்து.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியதால் மார்ச் மாதம் 3-வது வாரத்தில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடைவிதித்தது.ஐந்தாவது கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 1-ந்தேதியில் இருந்து ஜூன் 30-ந்தேதி வரை அமலில் இருக்கிறது. இதை மத்திய அரசு லாக்டவுன் என்று கூறாமல் ‘UnlockDown’ஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அளிக்கப்படும் என்று கூறியது.பின்னர் சர்வதேச விமான போக்குவரத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதற்கிடையில் ஜூலை மாதம் சர்வதேச விமான போக்குவரத்து குறித்து ஆலோசனையை தொடங்குவோம் என்று விமான போக்குவரத்து துறை மந்திரி தெரிவித்திருந்தார்.இதனிடையே, இந்தியாவில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் வெளிநாட்டு விமான சேவைகள் வரும் ஜூலை 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும், சரக்கு விமான போக்குவரத்திற்கும், சிறப்பு விமான போக்குவரத்திற்கும் எந்த தடையும் விதிக்கவில்லை என்று தெரிவக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி கடந்த வாரம் கூறும்போது, கொரோனா வைரஸ் தொற்று யூகிக்கக்கூடிய வகையில் இருந்தால், ஜூலை மாதத்தில் மீண்டும் பயணிகள் விமான சேவையை தொடங்குவது குறித்து இந்தியா முடிவெடுக்கும் என்று கூறியிருந்தார். எப்போது சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று என்னிடம் அடிக்கடி கேள்வி எழுப்பப்படுகிறது. வைரஸூன் தீவிரம் குறித்து எங்களுக்கு சுற்றுச்சூழல் அமைப்புகள் முன்கூட்டியே தெரிவித்தால், வரும் மாதத்தில் நாம் மீண்டும் சேவையை தொடங்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால், இது இந்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தால் எடுக்கப்பட்டது அல்ல. இந்த முடிவுகள் உள்நாட்டு நிலைமையைப் ஆய்வு செய்த பின்னர் அரசு எடுக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

Leave your comments here...