ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி : பாஜக தலைவர்கள் குற்றச்சாட்டு : விழிபிதுங்கும் காங்கிரஸ்..?

அரசியல்இந்தியா

ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி : பாஜக தலைவர்கள் குற்றச்சாட்டு : விழிபிதுங்கும் காங்கிரஸ்..?

ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி : பாஜக தலைவர்கள் குற்றச்சாட்டு : விழிபிதுங்கும் காங்கிரஸ்..?

லடாக் எல்லையில், இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து, பாஜகவும், காங்கிரஸ், வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளன. லடாக் தாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு மீதும், பிரதமர், மோடி மீதும், காங்கிரஸ் எம்.பி., ராகுல், ‘டுவிட்டரில்’ தினமும் குற்றம் சுமத்தி வருகிறார். இதற்கு, பாஜக சார்பில், பதில் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சரும், ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: கடந்த, 2017ல், டோக்லாமில், இந்திய – சீன படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன. அப்போது, டில்லியில், இந்தியாவிற்கான சீன துாதரை, ராகுல் ரகசியமாக சந்தித்தார். தற்போது, கல்வானில் நடந்த மோதலின் போதும், நாட்டை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது. காங்கிரஸ் கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அது பற்றி, எதுவும் தெரிவிக்காமல், அக்கட்சி மவுனமாக உள்ளது. காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும், ராஜிவ் அறக்கட்டளையின் தலைவராக, சோனியா உள்ளார். இதன் உறுப்பினர்களாக, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா, சிதம்பரம் உட்பட பலர் உள்ளனர். இந்த அறக்கட்டளைக்கு, சீன துாதரகம் சார்பில், 2005 – 06ம் ஆண்டில், நிதி வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றி, 2005 – 06ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில், ராஜிவ் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது. சீனாவிடமிருந்து நிதியுதவி பெறுவது தான், காங்கிரஸ் செய்து கொண்ட ஒப்பந்தமா; இந்த நிதியுதவியால் தான், ராகுல், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா என்பதை, காங்கிரஸ் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, ரவிசங்கர் பிரசாத் கூறினார்.இதனை மறுத்துள்ள காங்., செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா உண்மையான பிரச்னைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை பா.ஜ.,திசை திருப்ப முயற்சிக்கிறது.

இது குறித்து பாஜக தலைவர் ஜேபி நட்டா : கடந்த 2005 – 06 ம் ஆண்டில், சீனாவும் சீன தூதரகமும், ராஜிவ் அறக்கட்டளைக்கு 300 ஆயிரம் அமெரிக்க டாலர் நிதி வழங்கியுள்ளது. இது தான் காங்கிரஸ் மற்றும் சீனா இடையே ரகசிய ஒப்பந்தம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...