கொரோனா வைரஸ் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து.!

இந்தியா

கொரோனா வைரஸ் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து.!

கொரோனா வைரஸ் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து.!

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ முன்பு திட்டமிட்டிருந்தது.

கொரோனா பரவல் காரணமாக, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியது

இந்நிலையில், சிபிஎஸ்இ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ஜூலை 1 முதல் 15 வரை நடத்த திட்டமிடப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. டில்லி, மஹாராஷ்டிரா, தமிழகத்தில், தேர்வுகளை நடத்தும் சூழ்நிலை இல்லை என மாநில அரசுகள் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல், ஐசிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave your comments here...