பிஎம் கேர்ஸ் நிதி குறித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரதமர் மோடி – 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க பிஎம் கேர்ஸ் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு..!
கொரோனா வைரஸின் தாக்கம் இன்று உலக நாடுகளை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்தபொழுதும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்பவே கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இதற்கு மத்தியில் தனிநபர், நிறுவனங்களும் நிவாரணத்திற்கு பங்களிப்பு அளிக்க முன்வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அழைப்புவிடுத்துள்ளன. மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் நன்கொடைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேசிய அளவில் கொரோனா போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள பி.எம்.கேர்ஸ் (PM CARES) என்கிற புதிய நிதியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
இதைப் பற்றி அறிவிப்பினை பிரதமர் மோடி கூறுகையில்:- அதில், “மக்கள் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அதற்கு மரியாதை அளிக்கும் விதமாக பி.எம்.கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதில் இது மிகப்பெரிய பங்களிப்பு புரியும்” என்று தெரிவித்திருந்தார்.பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து பிரபலங்கள், பெரு நிறுவனங்கள் பி.எம்.கேர்ஸ் நிதிக்கு முன்வந்து நன்கொடைகள் அளித்தன.
இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
#PMCaresFund Trust has allocated Rs. 2000 crore for supply of 50,000 #MadeInIndia ventilators to government run #COVID hospitals in all States/UTs.
Further, a sum of Rs. 1000 crore has been allocated for the welfare of migrant labourers.
◾https://t.co/0bf3JDfa7o#Covid_19
— PIB India (@PIB_India) June 23, 2020
பிஎம் கேர்ஸ் நிதி மூலம், ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரித்து கொரோனா சிறப்பு மருத்துவமனைகளுக்கு வழங்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 30 ஆயிரம் வென்டிலேட்டர்கள் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்பட உள்ளது. எஞ்சிய 20 ஆயிரத்தில் அக்வா ஹெல்த்கேர் 10 ஆயிரம், ஏஎம்டிஇசட் பேசிக் 5,650, ஏஎம்டி இசட் ஹை என்ட் 4000, அலைட் மெடிக்கல் 350 வென்டிலேட்டர்கள் தயாரிக்க உள்ளன.தற்போது வரை 2,923 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு, அதில் 1,340 மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்பட்டு விட்டது. மஹாராஷ்டிராவிற்கு 275, டில்லிக்கு 275, குஜராத்திற்கு 175, பீஹாருக்கு 100, கர்நாடகாவிற்கு 90, ராஜஸ்தானுக்கு 75 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜூன் இறுதிக்குள் 14 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரித்து மாநிலங்களுக்கு வழங்கப்படும்.
மேலும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக மாநில அரசுகளுக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு, மருத்துவ வசதி, போக்குவரத்து செலவுகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அதில், மஹாராஷ்டிராவிற்கு 181 கோடி, உ.பி.,க்கு 101 கோடி, தமிழகத்திற்கு 83 கோடி, குஜராத்திற்கு 66கோடி டில்லிக்கு 55 கோடி, மேற்கு வங்கத்திற்கு 53 கோடி, பீஹாருக்கு 51 கோடி, ம.பி.,க்கு 50 கோடி, ராஜஸ்தானுக்கு 50 கோடி, கர்நாடகாவிற்கு 34 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
Leave your comments here...