இந்திய ராணுவ வீரர்களை அவமதிப்பதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிறுத்தவேண்டும் – பாஜக தலைவர் நட்டா பதிலடி..!

அரசியல்இந்தியா

இந்திய ராணுவ வீரர்களை அவமதிப்பதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிறுத்தவேண்டும் – பாஜக தலைவர் நட்டா பதிலடி..!

இந்திய ராணுவ வீரர்களை அவமதிப்பதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிறுத்தவேண்டும் – பாஜக தலைவர் நட்டா பதிலடி..!

லடாக்கில் நடந்த சீனா அத்துமீறல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அரசுக்கு அறிவுரை கூறி அறிக்கை வெளியிட்டார்.இந்திய-சீன ராணுவமிடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி பிரதமர் மோடி விளக்கமளித்தார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெளியிட்ட அறிக்கையில்:- நமது அரசாங்கத்தின் முடிவுகளும் செயல்களும் வருங்கால சந்ததியினர் நம்மை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதில் தீவிரமான தாக்கங்களைக் கொண்டிருக்கும். எங்களை வழிநடத்துபவர்கள் ஒரு புனிதமான கடமையில் உள்ளவர்கள் ஆவார்கள். நமது ஜனநாயகத்தில் அந்த பொறுப்பு பிரதமர் பதவிக்கு உள்ளது. பிரதமர் தனது பேச்சின் தாக்கங்கள் மற்றும் நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய மற்றும் பிராந்திய நலன்களைப் பற்றிய அறிவிப்புகளை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சீனா வெட்கமின்றி சட்டவிரோதமாக இந்திய பகுதிகளான கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பங்கோங் த்சோ ஏரி போன்ற பகுதிகளில் ஏப்ரல் 2020 க்கு இடையில் பல ஊடுருவல்களை மேற்கொண்டு இன்று வரை உரிமை கோர முயல்கிறது. அச்சுறுத்தல்களால் நாம் பாதிக்கப்பட மாட்டோம் நாம் பிராந்திய ஒருமைப்பாட்டுடன் சமரசம் செய்ய அனுமதிக்க முடியாது. பிரதமர் தனது பேசுக்களால் தங்கள் நிலைப்பாட்டை நிரூபிக்க பயன்படுத்த அனுமதிக்க முடியாது, மேலும் இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் அதை மேலும் அதிகரிப்பதைத் தடுக்க அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தவறான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் உண்மையை மறைக்க முடியாது. கர்னல் பி. சந்தோஷ் பாபு மற்றும் இறுதி தியாகம் செய்த நமது ராணுவவீரர்களுக்கு நீதியை உறுதிசெய்து, நமது பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாக்கும் வகையில், பிரதமர் மற்றும் அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். குறைவானதைச் செய்வது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு செய்யும் வரலாற்று துரோகமாகும் எனறு கூறி உள்ளார்.

இந்நிலையில் மன்மோகன் சிங்கின் இந்த அறிக்கைக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜே.பி.நட்டா கூறுகையில்:- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிக்கை வெறும் வார்த்தை விளையாட்டு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் தலைவர்களின் இது போன்ற அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.


இதே காங்கிரஸ் தான், ஆயுதப்படைகள் குறித்து கேள்வி எழுப்பியதுடன் அவமரியாதை செய்ததை நினைவில் கொள்ள வேண்டும்.ஒற்றுமையாக இருக்க வேண்டும் என மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். அவரது வார்த்தைகள் மூலம், யார் ஒற்றுமைக்கான சூழ்நிலையை கெடுக்க போகிறார்கள் என்பது தெரியவரும்.


இதனை மன்மோகன், அவரது கட்சி தலைமைக்கு புரிய வைக்க வேண்டும்.இந்தியாவுக்கு சொந்தமான 43 ஆயிரம் சதுர கி.மீ., பகுதியை சீனர்களிடம் எதிர்ப்பு காட்டாமல் ஒப்படைத்த கட்சியை சேர்ந்தவர் தான் மன்மோகன் சிங். காங்கிரஸ் ஆட்சியின் போது, எந்த எதிர்ப்பும் காட்டாமல், இந்திய பகுதிகள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டன. சீனாவின் திட்டங்கள் குறித்து கவலைப்படுபவரது ஆட்சியில் தான், நூற்றுக்கணக்கான சதுர கி.மீ., இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது.


தற்போது அவர் சீனா குறித்து கவலைப்படுகிறார். அவரது ஆட்சியில் 2010 முதல் 2013 வரை 600 ஊடுருவல்கள் நடந்தன. தற்போது மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதை மன்மோகன் நிறுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான், ஆயுதப்படைகளுக்கு அவமரியாதை செய்யப்பட்டது. அதனை தே.ஜ., அரசு மாற்றியுள்ளது. மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும், நமது ஆயுதப்படைகள் மீது மீது கேள்வி எழுப்பி அவமரியாதை செய்வதை நிறுத்த வேண்டும். சர்ஜிக்கல் தாக்குதல் மற்றும் விமான தாக்குதல் நடத்திய போதும் இதனை செய்தீர்கள். தேசத்தின் ஒற்றுமையை புரிந்து கொள்ளுங்கள். இதற்கான காலம் கடந்து போகவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave your comments here...