பகவத் கீதையில் கூட கிருஷ்ணர் யோகவை பற்றி கூறியுள்ளார் – சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி பேச்சு..!

இந்தியா

பகவத் கீதையில் கூட கிருஷ்ணர் யோகவை பற்றி கூறியுள்ளார் – சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி பேச்சு..!

பகவத் கீதையில் கூட கிருஷ்ணர் யோகவை பற்றி கூறியுள்ளார் – சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி பேச்சு..!

நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. யோகா தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களிடம் அவர் உரையாற்றினார்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் வீட்டிற்குள் இருந்தே யோகா செய்ய வலியுறுத்தப்பட்டது.

அப்போது நாட்டு மக்களிடம் உரையாற்றிதாவது:-6ஆவது சர்வதேச யோகா தினத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக இது அமைந்துள்ளது. வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் யோகா செய்யுங்கள். யோகா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஏராளமானோர் யோகா கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டுள்ளார்கள். கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறையாக இருக்கிறது.உங்களது அன்றாட வாழ்வில் யோகாவை ஒரு அங்கமாக பழகுங்கள். இது, உடல் வலிமையுடன் மன வலிமையையும் மேம்படுத்துகிறது. யோகாவிற்கு மதம், மொழி, நாடு என்ற எந்த பேதமும் இல்லை.


யோகாவின் பயன்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உலகம் தற்போது உணர்ந்துள்ளது. பகவத் கீதையில் கூட யோகா குறித்து கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள்.அளவான உணவு, போதுமான விளையாட்டு, தேவையான உறக்க பழக்கம் மற்றும் உங்கள் வேலைகளையும் கடமைகளையும் சரிவரச்செய்வதே யோகாவாகும்.லட்சிய மனிதன் என்பவன் யாருமற்ற இடத்திலும் இயக்கம் நிறைந்தவனாக தீவிர இயக்கம் நிறைந்த இடத்திலும் அமைதி கொண்டவனாக இருப்பான் என்றார் சுவாமி விவேகானந்தர். எந்த நபருக்கும் இது வாய்க்கக்கூடிய சிறந்த திறன் இது: இவ்வாறு மோடி பேசினார்.

Leave your comments here...