சீன விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் ; பிரதமர் மோடி என்ன கூறினார்.. ?

இந்தியா

சீன விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் ; பிரதமர் மோடி என்ன கூறினார்.. ?

சீன விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம்  ; பிரதமர் மோடி என்ன கூறினார்.. ?

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், ( ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சீனாவின் அத்துமீறிய செயலால் நாடு முழுவதும் மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். சீன தயாரிப்புகள் அனைத்தையும் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழ ஆரம்பித்துள்ளது.


இந்நிலையில் சீன விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி:- சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாட்டிற்காக உயிர் நீத்த இந்திய வீரர்கள் 20 பேரும், தாங்கள் இறப்பதற்கு முன்பு, பாரத மாதாவிற்கு அச்சுறுத்தல் விடுத்த சீன ராணுவத்திற்கு தக்கபாடம் கற்பித்ததாகக் கூறினார். நாட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வான், கடல், நிலம் நமது நாட்டை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை நமது ஆயுதப்படை மேற்கொள்ளும் என அனைத்து தளங்களிலும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.


ராணுவத்தினர் மீது நாடு அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்கு உறுதுணையாக உள்ளது எனக் கூறினார்.இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது.ராஜ்ய ரீதியிலும் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாக சீனாவிடம் எடுத்துரைத்துள்ளோம். இந்தியா அமைதி மற்றும் நட்பை விரும்புகிறது. இதற்கிடையே அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன எல்லை பிரச்னைனையில் தகவல் அளிப்பதில் இந்திய உளவுத்துறை தோல்வி எதையும் அடையவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.


Leave your comments here...