இந்தியா இமாலய வெற்றி ; 184 ஓட்டுகள் பெற்று ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரானது இந்தியா..!

இந்தியாஉலகம்

இந்தியா இமாலய வெற்றி ; 184 ஓட்டுகள் பெற்று ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரானது இந்தியா..!

இந்தியா இமாலய வெற்றி ; 184 ஓட்டுகள் பெற்று ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரானது இந்தியா..!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் இந்தியா 184 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது.இதன் மூலம் சக்திவாய்ந்த பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன்,பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் 10 நிரந்தரமில்லாத உறுப்பு நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா ரஷ்யா பிரிட்டன் சீனா பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவி காலம் இரண்டு ஆண்டுகள்.மொத்தம் உள்ள 10 தற்காலிக உறுப்பினர் இடங்களில் ஐந்து இடங்களுக்கான தேர்தல் ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம்.இந்நிலையில் பாதுகாப்பு கவுன்சிலில் 2021 மற்றும் 2022ம் ஆண்டுக்கான ஐந்து தற்காலிக உறுப்பினர் நாடுகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேற்று நடந்தது. இதில் ஆசிய – பசிபிக் பிராந்தியத்துக்கான இடத்துக்கு இந்தியா போட்டியிட்டது. இதில் இந்தியாவுக்கு ஆசிய – பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த சீனா பாகிஸ்தான் உட்பட 55 நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால் தேர்தலுக்கு முன்பே இந்தியா வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மார்ச் மாதத்திலிருந்து தூதர்கள் முககவசம் அணிந்து, சமூக தூரத்தை கடைபிடித்து பொதுச் சபை மண்டபத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் தங்கள் ரகசிய வாக்குகளை செலுத்தி வந்தனர்.ஐ.நா. பொதுச் சபை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப் பெட்டியில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் ஓட்டளித்தனர். மொத்தமுள்ள 193 உறுப்பினர்களில், 184 ஓட்டுகள் இந்தியாவுக்கு விழுந்ததையடுத்து, இந்தியா இமாலய வெற்றி பெற்றது. இந்தியாவுடன், அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் வெற்றி பெற்றன. இந்தியா 8வது முறையாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய உறுப்பினர்கள் தங்கள் இரண்டு ஆண்டு காலத்தை 15 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தொடங்குவார்கள்.ஐநா பொதுச் சபையின் 75 வது அமர்வின் தலைவராக துருக்கிய இராஜதந்திரி வோல்கன் போஸ்கிரையும் தேர்ந்தெடுத்தனர். இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் பதவி ஏற்றுக்கொள்வார்.பொருளாதார கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிப்பது மற்றும் சக்தியைப் பயன்படுத்துவதை அங்கீகரிப்பது போன்ற சட்டபூர்வமான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரே அமைப்பான் ஐநா அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய ஐந்து நிரந்தர வீட்டோ-உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

Leave your comments here...